search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தையல் தொழிலாளி"

    • அண்ணாதுரை குடி போதையில் தாய் வீட்டுக்கு சென்றார்.
    • அறைக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு நாடார்மேடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    அண்ணா துரைக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரை மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்ட தால் குடித்து விட்டு வீட்டுக்குள் வரக்கூடாது என்று ராஜேஸ்வரி கண்டி த்து உள்ளார்.

    இதனால் அண்ணாதுரை கோபித்து கொண்டு சின்ன செட்டிபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அவ்வபோது மகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று அண்ணாதுரை குடி போதையில் தாய் வீட்டுக்கு சென்றார். அறைக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு கொண்டார்.

    அக்கம் பக்கத்தினர், அண்ணாதுரையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அண்ணாதுரை இறந்து விட்டதாக தொிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பனியன் நிறுவனத்தில் கடந்த 1 வருடமாக சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.
    • திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சக்தி நகரில் வசிப்பவர் குமரேசன்(வயது 42) . இவர் மனைவி சத்யா மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். அருகே உள்ள பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சகோதரர் ரமேஷ் குமார் என்பவர் இவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது குமரேசன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குமரேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ரமேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் குமரேசன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் உஜகார் சிங்(37). இவர் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் கடந்த 1 வருடமாக சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வந்தார். ஊருக்குச் சென்று வந்ததிலிருந்து சோகமாகவே காணப்பட்ட அவர், நேற்று காலை வேலைக்கு வரவில்லை. இதையடுத்து உடன் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர்,அங்குள்ள பனியன் நிறுவன விடுதியில் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, உஜகார் சிங் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே கிடந்துள்ளார். இதையடுத்து அவரை திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உஜகார் சிங் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி திவ்யா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்பவரது மகன் மகாலிங்கம்(42). இவர் பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் கார் ஒர்க் ஷாப்பில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை ஒர்க் ஷாப்பில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் வெளியே சென்ற ஒர்க் ஷாப் உரிமையாளர் குணசேகரன் திரும்பி வந்தபோது, மகாலிங்கம் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மாநிலம் தழுவிய அளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • உதய்பூர் படுகொலை சம்பவத்திற்கு அசோக் கெலாட், ராகுல்காந்தி கண்டனம்.

    உதய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்தவர் கண்கையா லால். நேற்று இவரது கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர்.

    சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கண்கையா லால் கருத்து தெரிவித்ததால் படுகொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவிருந்தனர்.

    இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டதால் உதய்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது.

    இந்நிலையில் ராஜ்சமந்த் மாவட்டம் பீம் பகுதியில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அகமது பிடிபட்டதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    உதய்பூர் தையல்காரர் கொலையில் வெளிநாட்டு சதி இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உதய்பூர் விரைந்தனர். 

    உதய்பூர் படுகொலை சம்பவத்தை கண்டிப்பதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சமாதான கொள்கையின் விளைவுதான் இந்த கொடூர நிகழ்வுக்கு காரணம் என்று, ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா குற்றம் சாட்டி உள்ளார். 


    உதய்பூர் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இநத கொடூரமான கொலையால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், மதத்தின் பெயரால் நடக்கும் மிருகத்தனத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

    கொடூரமான பயங்கரவாதத்தை பரப்புபவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை முறியடிக்க வேண்டும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பட்டப்பகலில் தையல் தொழிலாளி தலையை துண்டித்த சம்பவம் ராஜஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
    • அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் இன்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கண்ணையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர். இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    விசாரணையில், சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கண்ணையா லால் படுகொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது.

    இந்தக் கொடூர சம்பவம் ராஜஸ்தானில் காட்டுத்தீயாக பரவியதால் அங்கு கடையடைப்பு , வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற, வன்முறை சம்பவங்கல் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ×