search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ragul ganthi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழைந்தது பாத யாத்திரை.
    • சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பவார் தகவல்

    மும்பை:

    தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தை பாத யாத்திரை சென்றடைந்தது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் அனுமூலரேவந்த் ரெட்டியிடம் தேசிய கொடியை கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர வழங்கினர். 

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடைபெறும் ராகுல்காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசோக் சவான் உள்பட மாநில காங்கிரஸ் தலைவர்கள் தன்னைச் சந்தித்து, நவம்பர் 7 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் பாத யாத்திரை நுழையும் போது, ​​ஒரு பயணத் திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக  தெரிவித்தார்.

    பாத யாத்திரை காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி என்றாலும் இதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது, எனவே, இங்கு அது நடைபெறும்போது அதில் இணைவோம் என்றும் சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநிலம் தழுவிய அளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • உதய்பூர் படுகொலை சம்பவத்திற்கு அசோக் கெலாட், ராகுல்காந்தி கண்டனம்.

    உதய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்தவர் கண்கையா லால். நேற்று இவரது கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர்.

    சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கண்கையா லால் கருத்து தெரிவித்ததால் படுகொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவிருந்தனர்.

    இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டதால் உதய்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது.

    இந்நிலையில் ராஜ்சமந்த் மாவட்டம் பீம் பகுதியில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அகமது பிடிபட்டதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    உதய்பூர் தையல்காரர் கொலையில் வெளிநாட்டு சதி இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உதய்பூர் விரைந்தனர். 

    உதய்பூர் படுகொலை சம்பவத்தை கண்டிப்பதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சமாதான கொள்கையின் விளைவுதான் இந்த கொடூர நிகழ்வுக்கு காரணம் என்று, ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா குற்றம் சாட்டி உள்ளார். 


    உதய்பூர் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இநத கொடூரமான கொலையால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், மதத்தின் பெயரால் நடக்கும் மிருகத்தனத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

    கொடூரமான பயங்கரவாதத்தை பரப்புபவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை முறியடிக்க வேண்டும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×