தையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

அண்ணாதுரை குடி போதையில் தாய் வீட்டுக்கு சென்றார்.அறைக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு கொண்டார்.
தையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு நாடார்மேடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

அண்ணா துரைக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரை மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்ட தால் குடித்து விட்டு வீட்டுக்குள் வரக்கூடாது என்று ராஜேஸ்வரி கண்டி த்து உள்ளார்.

இதனால் அண்ணாதுரை கோபித்து கொண்டு சின்ன செட்டிபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அவ்வபோது மகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று அண்ணாதுரை குடி போதையில் தாய் வீட்டுக்கு சென்றார். அறைக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு கொண்டார்.

அக்கம் பக்கத்தினர், அண்ணாதுரையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அண்ணாதுரை இறந்து விட்டதாக தொிவித்தனர்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com