search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய புலனாய்வு அமைப்பு"

    • மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது.
    • மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அந்த அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது.

    இந்நிலையில், இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வரும் 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்பட 6 மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் காவலில் எடுத்து விசாரித்தனர்.
    • நிர்வாகிகள் பலருக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் அந்த அமைப்பை சேர்ந்த பலரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதான நிர்வாகிகள் பலருக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் அவர்களின் காவலை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கைதனாவர்கள் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

    • பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது யார்? என்பதை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டது.
    • தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க சில அமைப்புகள் ரகசியமாக செயல்படுவதாக உளவுத்துறை எச்சரித்தது.

    இதுதொடர்பாக நடந்த விசாரணையில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் இருந்து பலர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது யார்? என்பதை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டது. இதில் கேரளாவில் இருந்து துருக்கி சென்ற மிதிலாஜ், அப்துல் ரசாக், ஹம்சா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    துருக்கியில் கைதான 3 பேரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அனில் கே பாஸ்கர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    இதில் குற்றம்சாட்டப்பட்ட மிதிலாஜ், அப்துல் ரசாக் மற்றும் ஹம்சா ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தார்.

    இவர்கள் மீதான தண்டனை விபரத்தை வருகிற 15-ந் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

    காஷ்மீரில் 2016-ம் ஆண்டு நக்ரோடா ராணுவ முகாம் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியை தேசிய புலனாய்வு முகமை காவலுக்கு எடுத்து விசாரித்துவருகிறது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நக்ரோடா ராணுவ முகாம் மீது 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 அதிகாரிகள் உள்பட 7 வீரர்கள் பலியானார்கள். இதில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் இந்திய வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீர் போலீசார் வடக்கு காஷ்மீர் லோலாப் பகுதியை சேர்ந்த முனீருல் ஹசன் காத்ரி என்பவரை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில், அவர் ஜெய்ஷ் இ முகமது என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது. அந்த தாக்குதலில் தனது பங்கு என்ன? என்றும் பாகிஸ்தானில் இந்த தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாகவும் அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை காத்ரியை காவலுக்கு எடுத்து விசாரித்துவருகிறது.
    ×