பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகளுக்கு மேலும் 90 நாள் காவல் நீட்டிப்பு: கொச்சி என்.ஐ.ஏ, கோர்ட்டு அனுமதி

பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் காவலில் எடுத்து விசாரித்தனர்.நிர்வாகிகள் பலருக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகளுக்கு மேலும் 90 நாள் காவல் நீட்டிப்பு: கொச்சி என்.ஐ.ஏ, கோர்ட்டு அனுமதி
Published on

திருவனந்தபுரம்:

பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் அந்த அமைப்பை சேர்ந்த பலரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதான நிர்வாகிகள் பலருக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் அவர்களின் காவலை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கைதனாவர்கள் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com