search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்"

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 30 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் மன்னார்குடி பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஒவல்குடியை சேர்ந்த சிற்றரசு என்பவரின் மகள் ரசிகா (வயது 23). பி.ஏ.பட்டதாரி. இவருக்கும் திருமக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரசிகா வெளிநாடு செல்வதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு திடீரென மாயமாகி விட்டார். அவர் தனது பாஸ்போர்ட் மற்றும் 30 பவுன் நகை ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றையும் எடுத்து சென்று விட்டார்.

    அவரை பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்றரசு வடுவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசிகா திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமாக என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மன்னார்குடி பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென்று மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    பேரையூர்:

    மதுரை அருகே உள்ள நல்லூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பாத்தையா. இவரது மகள் காளீஸ்வரி (வயது21). இவருக்கும், பாறப்பட்டியைச் சேர்ந்த பூசாரி மகன் சின்னபூசாரி (24) என்பவருக்கும், கடந்த 11-ந்தேதி திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவு மணமகன் வீட்டின் அருகே உள்ள வீட்டில் காளீஸ்வரி தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் அதிகாலையில் திடீரென்று அவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரியின் பெற்றோர் மற்றும் மணமகனின் உறவினர்கள் அந்த பகுதியில் காளீஸ்வரியை தேடினர். பலன் இல்லை.

    எனவே திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காளீஸ்வரியை தேடி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், செட்டி மண்டபம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் வடிவேலன். இவரது மனைவி நாகலட்சுமி. இவருடைய சகோதரி ரேவதி (வயது 19). கும்பகோணத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    ரேவதி, அவரது அக்கா நாகலட்சுமியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 17-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மில்லிற்கு வேலைக்கு சென்ற ரேவதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி, ரேவதியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து நாகலட்சுமி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான ரேவதியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் மயிலாடுதுறை அருகே காவேரிகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் கவுசல்யா என்கிற ரங்கநாயகி. இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கவுசல்யா மாலையில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் கவுசல்யா செல்போனிற்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ஆப் செய்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் பல இடங்களில் தேடி பார்த்தார் எங்கும் கிடைக்க வில்லை.

    இதனால் ரத்தினவேல் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    ×