search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கோவில்"

    • பதவியேற்பு விழாவில் மேயர் மகேஷ் பங்கேற்பு
    • பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    உறுப்பினராக இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்குச்சாலையைச் சேர்ந்த பிரபா ராமகிருஷ்ணன் சீதப்பாலை சேர்ந்த ராஜேஷ் இடைகோட்டை சேர்ந்த ஜோதிஷ்குமார் தோவாளை சண்முகா நகரை சேர்ந்த சுந்தரி கொல்லங்கோட்டை சேர்ந்த துளசிதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி யேற்பு விழா இன்று நடந்தது. சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தில் வைத்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன்ஆகியோர் முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரபா ராமகிருஷ்ணன், ராஜேஷ், சுந்தரி, ஜோதி ஷ்குமார்,துளசிதரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

    இதை தொடர்ந்து அறங்கா வலர் குழு தலைவர் தேர்வு நடந்தது. அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பதவி ஏற்று கொண்டார்.நிகழ்ச்சியில் திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் பசலியான், மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வன், ,திமுகஅணி அமைப்பாளர் அகஸ்தீசன், இ. என்.சங்கர், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்று கொண்ட பிரபாராம கிருஷ்ணன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • இரவு 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 2 மணிக்கு திருக்கொடியிறக்கமும் அதனைத் தொடர்ந்து இனிப்பு வழங்குதல்

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா கடந்த 17-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழா நாட்களில் பணி விடையும், உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், நாதஸ்வர கச்சேரியும், அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் நிகழ்ச்சியும், அய்யாவின் ஆன்மீக அருளிசை கச்சேரியும், அய்யா குதிரை வாகனத்தில் ்டையாடித்தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தல் நிகழ்ச்சியும், சமூக நாடகமும், திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11 -ம் திருவிழாவான நேற்று முன்தினம் 27-ம் தேதி திங்கள் கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், நண்பகல் 1 மணிக்கு பணிவிடையும், மாலை 3 மணிக்கு யானை முன்னே செல்ல மயிலாட்டம், கோலாட்டம், சிங்காரி மேளம், நாதஸ்வரத்துடன் ஆஞ்சநேயர் திருத்தேர் முன்னே செல்ல தெய்வத்திரு டாக்டர் எஸ். லெட்சுமணன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட செம்பவள பஞ்சவர்ண திருத் தேர் வீதி உலா வந்தது.

    செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் பவனியின் போது வழிநெடுகிலும் மோர் தர்மமும், பழதர்மமும், இனிப்பு தர்மங்களும், கோயில்விளை சந்திப்பில் வைத்து மாபெரும் அன்னதர்மமும் நடைபெற்றது.

    திருத்தேர் வீதி உலாவின் போது அய்யாவின் அன்பு கொடிமக்கள் வழிநெடுகிலும் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர். அய்யாவின் அன்புக்கொடி மக்கள் காவி உடை அணிந்து, முத்துக்கொடைஏந்தி, கைகளில் காவி கொடி பிடித்தபடி, அய்யா சிவ சிவ அரகரா என்ற மந்திரம் ஒலித்தபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

    திருத்தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு மேல உடையப்பன்குடியிருப்பு வழியாக கோயில் விளை சந்திப்பு வந்து பின்னர் கோயிலை வந்தடைந்தது. இரவு 7 மணிக்கு மாபெரும் அன்னதர்மமும், 10 மணிக்கு உடையப்பன்குடியிருப்பு ஊரில் 2021- 2022 கல்வி ஆண்டில் 12 மற்றும் 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இரவு 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், இரவு 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 2 மணிக்கு திருக்கொடியிறக்கமும் அதனைத் தொடர்ந்து இனிப்பு வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

    திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் எம். ஆர். காந்தி எம்.எல்.ஏ, பாஜக மாநில செயலாளரும், நாகர்கோவில் நகராட்சியின் முன்னாள் தலைவருமான மீனாதேவ், நாகர்கோவில் மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவர் முத்துராமன், நாகர்கோவில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், வீரசூர பெருமாள், ரமேஷ், பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் அருள், பாஜக நாகர்கோவில் தெற்கு மண்டல தலைவர் முரளிமனோகர்லால், வள்ளியூர் ஈஸ்வரி நர்சிங் ஹோம் சரவணன், களியக்காவிளை கிஷோர்குமார், மயிலாடி புதூர் தர்மசீடர் ராஜு, நாகர்கோவில் மேஜர் நாகமணி, சின்னணைந்தான்விளை அழகன் மார்டன் அரிசி ஆலை உரிமையாளரும், தொழிலதிபருமான டாக்டர் முத்தழகன், இன்ஜினியர் ஈஸ்வர்சிங், கீழகிருஷ்ணன் புதூர் ஸ்ரீ காந்திஅன்பு, மேலதர்மபுரம் பத்திர எழுத்தர் பால்நாடார், நங்கூரன்பிலாவிளையை சேர்ந்த தொழிலதிபரும், கந்தசுவாமி சன்ஸ் உரிமையாளருமான இராஜலிங்கம், தேர் கொடிமர சிற்ப கலை வல்லுனர் பீச்ரோடு பெரியவிளையை சேர்ந்த முத்துராஜன், மேலக்காட்டுவிளை இராஜகோபாலன், மணக்குடி பீட்டர்ஜாண் உட்பட பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    திருத்தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன், உபதலைவர் சந்திரசேகர், செயலாளர் துரைச்சாமி, இணைச் செயலாளர் சிவசுப்பிர மணியன், பொருளாளர் உதயகுமார், துணைப் பொருளாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணமணி, நாராயணப் பெருமாள், மணிகண்டன், ஸ்ரீதரன், நாராயணமணி, ராஜேஸ்வரன், சுரேந்திரன், தங்கலிங்கம், மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

    திருத்தேரோட்டத்தை முன்னிட்டு சுசீந்திரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×