search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்பால்"

    • அம்ருதம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி பெண்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி வந்தார்.
    • இயக்கம் மாநிலம் முழுவதும் விரிவடைந்து ஏராளமான பெண்கள் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள் ஏராளம் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் தாய்ப்பால் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    பெண்களிடம் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போக தாய்ப்பாலை தானம் செய்கிறார்கள்.

    கோவையில் ரூபா என்ற இளம் மென்பொருள் என்ஜினீயர் அம்ருதம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி பெண்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி வந்தார்.

    தற்போது இந்த இயக்கம் மாநிலம் முழுவதும் விரிவடைந்து ஏராளமான பெண்கள் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 2116 லிட்டர் தாய்ப்பாலை பெண்கள் தானம் செய்து இருப்பதாக ரூபா தெரிவித்தார்.

    17 மாவட்டங்களை சேர்ந்த தாய்மார்கள் இவ்வளவு பாலையும் தானம் செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாய்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
    • ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் ரோட்டரி சங்கம், செய்யது ஹமீதா கல்லூரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் நடந்தது.

    கீழக்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய நடைபயணம் முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை சந்திப்பில் முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில் தாய்ப்பாலின் அவசியத்தையும், நன்மையையும் மாணவிகள் கோஷமிட்டு வெளிப்படுத்தினர்.

    கீழக்கரை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா ரோட்டரி சங்க தலைவர் கபீர் தலைமையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன் முன்னிலையில் நடந்தது. இதில் புதிதாக குழந்தை பெற்ற பெண்கள், கருவுற்று ஆலோசனைகள் பெற வந்த பெண்கள் 20 பேருக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.

    இந்த நிகழ்வுகளில் அரசுமருத்துவமனை மருத்துவர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், செய்யது ஹமீதா கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தாய்பால் வார விழா: பெண்கள் உறுதிமொழி எடுத்தனர்.
    • தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் நகர்புற வட்டாரத்தில் வட்டார அளவிலான உலகத்தாய்ப்பால் வார விழா யாதவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கலட்சுமி, மருத்துவ அலுவலர்கள் அண்ணாமலை அம்மாள், ராமலட்சுமி, நகர சுகாதார செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார மேற்பார்வையா ளர்கள், வட்டார திட்ட உதவியாளர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்,வளர் இளம் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கலட்சுமி பேசும்போது, தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் குழந்தையின் பொன்னான 1000 நாள்கள் பற்றி விளக்க உரையாற்றினார்.

    கர்ப்ப கால முன், பின் பராமரிப்பு குறித்து மருத்துவ அலுவலர் அண்ணாமலை அம்மாள் பேசினார். விழாவில் காய்கறி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஊட்டச்சத்து மிக்க உணவுகள் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. தாய்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்த பேரணியை மருத்துவ அலுவலர் ராமலட்சுமி தொடங்கிவைத்தார்.

    ×