search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்காலிக ஆசிரியர்"

    • தற்காலிக பணியிடங்க–ளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேரடியாகவும் ,ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • மாவட்டத்தில் உள்ள 139 காலி பணியிடங்களுக்கு மொத்தம் சுமார் 3900 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ம் கல்வி–யாண்டில் கடந்த ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்- 18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்காலிக பணியிடங்க–ளுக்கு விண்ணப்பிப்ப–வர்கள் நேரடியாகவும் ,ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பிக்க குவிந்தனர்.

    இதேபோல் பெருந்துறை, பவானி கோபிசெட்டி–பாளையம், சத்தியமங்கலம், ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களிலும் பட்ட–தாரிகள் விண்ணப்பிக்க குவிந்தனர். குறிப்பாக பெண் பட்டதாரிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பித்து சென்றனர்.

    சிலர் தபால் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தில் உள்ள 139 காலி பணியிடங்களுக்கு மொத்தம் சுமார் 3900 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்
    • 4-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர்கள், 41 பட்டதாரி ஆசிரியர்கள், 58 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 163 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து கடந்த 4-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலமாகவும், நேரிலும், இணையதள முகவரிகள் மூலமாகவும் பெறப்பட்டன.

    இதில், 64 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,423 பேரும், 41 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,441 பேரும், 58 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 1,129 பேரும் என மொத்தமுள்ள 163 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட கல்வித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது போல் வாக்குறுதி கொடுத்த நீங்களும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • தகுதித் தேர்வை முடித்தவர்களை மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக பணியில் சேர்க்கலாம்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கல்யாணரங்கன் (எ) பாலாஜி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சேகரன், வட்டார செயலாளர்கள் இளம்வழுதி, கண்ணன், பாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க சேகர் வரவேற்றார். அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓர் ஆசிரியர் பள்ளிகள் உள்ளது. உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதே நேரம் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி எதிர்க்கிறது. 8 மாதங்களுக்கு பிறகு அந்த ஆசிரியர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே நிரந்தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    தகுதித் தேர்வை முடித்தவர்களை மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக பணியில் சேர்க்கலாம். அவர்கள் நிரந்தரமாக பணியாற்றுவார்கள். தேவையில்லாத தற்காலிக ஆசிரியர் பணி வேண்டாம். இத்திட்டம் அக்னி பாத் திட்டத்தை விட இது மோசமானது.

    ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது போல் வாக்குறுதி கொடுத்த நீங்களும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இளநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதில் மாநில அமைப்புச் செயலாளர் முரளி, மாநில தலைவர் நம்பிராஜ், பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், அகில இந்திய பொது குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், நல்லாசிரியர் ராஜசேகர், இடைநிலை ஆசிரியர் ரஞ்சித் குமார் கலந்து கொண்டனர் மாவட்ட பொருளாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    • விண்ணப்பதாரர்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது அனைத்து கல்விச் சான்றுகளுடன் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், அதனை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு தகுதியுள்ள நபர் தேர்வு செய்யப்படுவார்கள்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தற்காலிக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    காலிப்பணியிட விவரம் மாவட்ட கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது அனைத்து கல்விச் சான்றுகளுடன் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    பெரம்பலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் deopmb2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், வேப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் deoveppur2018@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், அதனை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு தகுதியுள்ள நபர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-4, ஆங்கிலம்-1, கணிதம்-5, அறிவியல்-2, சமூக அறிவியல்-6 என மொத்தம்-18 பணியிடங்கள் காலியாக உள்ளன. முதுகலை ஆசிரியர்கள் கணிதம்-2, பொருளியல்-8, வணிகவியல்-10 என மொத்தம் 20 பணியிடங்கள் உள்ளன. பட்டதாரி ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள்,

    இல்லையெனில் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள். இல்லையெனில் உரிய கல்வி தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அருகே உள்ள மாவட்டத்தில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

    இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×