search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    • விண்ணப்பதாரர்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது அனைத்து கல்விச் சான்றுகளுடன் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், அதனை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு தகுதியுள்ள நபர் தேர்வு செய்யப்படுவார்கள்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தற்காலிக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    காலிப்பணியிட விவரம் மாவட்ட கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது அனைத்து கல்விச் சான்றுகளுடன் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    பெரம்பலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் deopmb2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், வேப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் deoveppur2018@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், அதனை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு தகுதியுள்ள நபர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-4, ஆங்கிலம்-1, கணிதம்-5, அறிவியல்-2, சமூக அறிவியல்-6 என மொத்தம்-18 பணியிடங்கள் காலியாக உள்ளன. முதுகலை ஆசிரியர்கள் கணிதம்-2, பொருளியல்-8, வணிகவியல்-10 என மொத்தம் 20 பணியிடங்கள் உள்ளன. பட்டதாரி ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள்,

    இல்லையெனில் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள். இல்லையெனில் உரிய கல்வி தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அருகே உள்ள மாவட்டத்தில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

    இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×