search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டயர்கள்"

    • டயர் குடோனில் திறந்த வெளியில் டயர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குகிறது.
    • கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அச்சம் அப்பகுதி மக்களிடையே இருந்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை வீடு வீடாக சென்று அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை தீவிரம் காட்டி வருகின்றனர். வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் செல்லா ண்டியம்மன் கோவில் பகுதியில் டயர் குடோனில் திறந்த வெளியில் டயர்கள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. டயர்களில் தேங்கும் நன்னீரில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இதன் மீது குடோன் உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட டயர்கள் குவிந்து கிடப்பதால் நோய் பரவும் அச்சம் அப்பகுதி மக்களி டையே இருந்து வருகிறது.

    இந்த டயர்களை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுத்து டெங்கு இல்லாத மாநகரமாக உருவாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.
    • புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சியில் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லப்பா, சுகாதார ஆய்வாளர்கள் நாடிமுத்து , மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேங்கியுள்ள டயர்களையும் தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்தினார்கள்.

    பாபநாசம் பகுதியில் புகையிலை விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு ரூ.2,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்திருந்தார்.
    • சி.சி.டி.வி.யில் வெள்ளை நிற கார் ஒன்று வந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் தெற்கு வீதி காந்தி பூங்கா எதிரே வசிப்பவர் முத்துராமன். முன்பு நகை வணிகம் செய்து வந்தார். கடந்த ஆண்டு புதுரக சொகுசு கார் வாங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் முத்துராமன் தனது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டு பின்னர் ஒரு சில நாட்களாக தனது வீட்டின் முன்பு காரினை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்திருந்தார். இதனிடையே நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரின் நான்கு டயர்களையும் கல்லை வைத்து முட்டுக்கொடுத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இன்று காலை முத்துராமன் எழுந்து பார்த்தபோது காரின் டயர்கள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து முத்துராமன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் வெள்ளை நிற கார் ஒன்று இருமுறை சென்று வருவதும் பின்னர் நீண்ட நேரம் ஒரு இடத்தில் நின்று விட்டு மீண்டும் செல்வது போன்ற காட்சி பதிவாகி யுள்ளது. இதனால் மர்ம நபர்கள் காரில் வந்து டயர்களை கழட்டி திருடி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சீர்காழி நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பொதுமக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மருத்துவ கழிவுகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.
    • தேங்காய் சிரட்டை, டயர்களில் மழைநீர் தேங்கி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள அம்மா நகரில் குடியிருப்புகள் அருகே

    குப்பைகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக அள்ளப்படாமல் கிடந்து வருகிறது.

    சாலை ஓரத்தில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு குப்பைகள், அழுகிய காய்கறிகள், மருத்துவக் கழிவுகள், பழைய துணிமணிகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.

    மேலும் இறைச்சி கழிவுகள், சாலையில் அடிபட்டு இறந்த தெரு நாய், பூனைகள் ஆகியவையும் அவ்வபோது குப்பைகளில் வீசப்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளின் கிடக்கும் தேங்காய் சிரட் டை, டயர்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    பல மாதங்களாக அள்ளப்படாமல் உள்ள குப்பைகள் அவ்வப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரித்து வருவதால் புகைமூட்டத்தாலும் குடியி ருப்பு வாசிகள் வேதனை அடைந்திருக்கின்றனர்.

    ஆகையால் குப்பைகளை முழுமையாக அகற்றி தூய்மைப்படுத்தி அந்த இடத்திற்கு குப்பை தொட்டி வைத்து சீர் செய்ய வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×