என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோர்டான்"

    • பிரதமர் மோடி முதல் கட்டமாக நேற்று ஜோர்டான் நாட்டுக்குச் சென்றார்.
    • அங்கு பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

    அம்மான்:

    பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

    அதன்பின், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.

    இந்நிலையில், ஜோர்டான் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் பிரதமர் நரேந்திர மோடியை காரில் அருட்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது காரை ஜோர்டான் மன்னர் ஓட்டிச் சென்றார்.

    இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
    • ஜோர்டான் 6 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.

    இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க மல்யுத்த ஜாம்பவான் ஜோர்டான் பர்ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது.

    மல்யுத்த போட்டியில் 6 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், லண்டன் 2012 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜோர்டான் பர்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில்,

    1. வீரர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச மல்யுத்த சம்மேளனம், தங்களது விதிகளை மாற்ற வேண்டும்

    2. இரண்டாவது நாள் எடையை பரிசோதிக்கும் போது குறைந்தபட்சம் அனுமதிக்கப்பட்ட எடையை விட ஒரு கிலோ கூடுதலாக இருக்கலாம் என்று விதியை மாற்ற வேண்டும்.

    3. தற்போது மல்யுத்த போட்டிகளுக்கான எடை காலை எட்டு முப்பது மணிக்கு பரிசோதிக்கப்படுகிறது. இதனை 10:30 மணிக்காக மாற்ற வேண்டும்.

    4. எடை பரிசோதனையில் வீரர் தோல்வியை தழுவி விட்டால் அந்தப் போட்டியை கைவிட்டு எதிர் வீரருக்கு தங்கப் பதக்கத்தையும் எடை தேர்வில் தோல்வியடைந்த வீரருக்கு வெள்ளி பதக்கத்தையும் வழங்க வேண்டும்.

    5. வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கத்தை வழங்க வேண்டும்.

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகியோர் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர்.
    • தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் ஜோர்டான் வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் என்ற இருவர் பிப்ரவரி 5 ஆம் தேதி, சுற்றுலா விசாவில் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில நபருடன் சேர்ந்து இஸ்ரேலின் எல்லையை சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர்.

    அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தாமஸ் கேப்ரியல் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

    தாமஸ் கேப்ரியல் உயிரிழந்தது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

    மக்கள் போராட்டத்தை அடுத்து ஜோர்டான் பிரதமராக இருந்த ஹனி அல் முல்கி ராஜினாமா செய்ததை அடுத்து, உலக வங்கியில் பணியாறிய ஓமர் ரஸ்ஸாஸ் புதிய பிரதமராக நியமித்து மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். #OmarRazzaz
    அம்மான்:

    ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள் வீதிகளில் திரண்டு தொடர்ச்சியாக போராடினர்.

    போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இரண்டு ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஹனி அல் முல்கியை ராஜினாமா செய்யக்கோரி ஜோர்டன் மன்னர் அப்துல்லா உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, மன்னரை கடந்த 4-ம் தேதி சந்தித்த ஹனி அல் முல்கி, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

    இதனை அடுத்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவரும், உலக வங்கியில் பணியாற்றியவருமான ஓமர் ரஸ்ஸாஸ் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓமர் ரஸ்ஸாஸ் தலைமையிலான அரசு வரிப்பிரச்சனைகளை விரைவில் சீர் செய்ய வேண்டும் எனவும் மன்னர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார். #JordanPM
    ×