search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ஷ்வால்"

    • அறிமுக டெஸ்டில் வெளிநாட்டில் 150 ரன்னை தொட்ட முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
    • அறிமுக டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்ற 8-வது இந்தியர் ஜெய்ஷ்வால் ஆவார்.

    ஐ.பி.எல். போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஜெய்ஷ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அறிமுக டெஸ்டில் ஜெய்ஷ்வால் 171 ரன் குவித்தார்.

    இதன் மூலம் தொடக்க வீரரான அவர் புதிய சாதனை படைத்தார். அறிமுக டெஸ்டில் வெளிநாட்டில் 150 ரன்னை தொட்ட முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். ஒட்டு மொத்த அறிமுக டெஸ்டில் 150 ரன்னை எடுத்த 3-வது இந்தியர் ஜெய்ஷ்வால் ஆவார்.

    ஷிகர் தவான் 187 ரன்னும், ரோகித் சர்மா 177 ரன்னும் தங்களது முதல் டெஸ்டில் எடுத்தனர். இருவருமே இந்திய மண்ணில்தான் இதை சாதித்தனர்.

    171 ரன் குவித்த ஜெய்ஷ்வால் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அறிமுக டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்ற 8-வது இந்தியர் ஜெய்ஷ்வால் ஆவார்.

    பிரவீன் அம்ரே, ஆர்.பி.சிங், அஸ்வின், தவான், ரோகித் சர்மா, பிரித்விஷா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அறிமுக டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்று இருந்தனர். பிரவீன் அம்ரேயும் (டர்பன்), ஆர்.பி.சிங்கும் (பைசலாபாத்) வெ

    • இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான அவர் ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை லண்டனில் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரே லியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டியில் மாற்று வீரராக பங்கேற்க இயலாது.

    இதனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக ஜெய்ஷ்வால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான அவர் ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார்.
    • ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருபவர்களில் ஒருவர் ஜெய்ஷ்வால்.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார். ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார். அவரது சராசரி 48.08 ஆகும். ஸ்டிரைக்ரேட் 163.61 ஆக இருக்கிறது. ஒரு சதமும், 5 அரைசதமும் எடுத்து உள்ளார். 82 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடித்து உள்ளார். ஐ.பி.எல்.லில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ஜெய்ஷ்வால் 2-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினால் அவரது ரன் குவிப்பு மேலும் அதிகமாகும்.

    இந்நிலையில் ஐ.பி.எல்.போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஷ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த சீசனில் ஜெய்ஷ்வால் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொழில்நுட்ப ரீதியான பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் 20 முதல் 25 பந்தில் 40 முதல் 50 ரன்கள் எடுக்கிறார். 15 ஓவர்கள் விளையாடினால் சதம் அடிக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது அணிகள் ஸ்கோர் 190 முதல் 200 ரன்கள் வரை குவிக்க இயலும்.

    ஜெய்ஷ்வால் 20 ஓவர் போட்டிக்கு தயாராக இருக்கிறார். இதனால் இந்திய அணியில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். நல்ல நிலையில் இருக்கும்போது வாய்ப்பு வழங்கினால் தான் அவருக்கு நம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    ×