search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேகரிப்பு"

    • திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 821 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர், இழப்பு என 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.

    உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து நீர் வழங்கப்படுகிறது.விடுபட்ட பகுதிகளில் காண்டூர் கால்வாய், பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி மற்றும் பருவ மழைகள் ஏமாற்றியது உள்ளிட்ட காரணங்களினால் நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பது தாமதமாகியுள்ளது.

    இந்நிலையில் 4ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டது.திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் ஒரு சுற்று நீர் வழங்க அதிகாரிகள், திட்ட குழு ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள 60 அடியில் 44.82 அடியாகவும், மொத்த கொள்ளளவான 1,935.25 மில்லியன் கனஅடியில் 1,322.93 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 821 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர், இழப்பு என 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.

    அதிகாரிகள் கூறுகையில், நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில் திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற 20-ந்தேதி, நீர்மட்டம் 54 அடி வரை உயர வாய்ப்புள்ளது. ஒரு சுற்றுக்கு, 1,900 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும். பருவ மழை, அணைகள் நீர் இருப்பை பொருத்து கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். 

    • மழைக்காலங்களில் நீர் வழிப்பாதைகளில் நடவு செய்வதற்காக பனை விதைகளை சேகரிக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர்
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா அண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் புயல் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் குளங்களின் கறைகளிலும் நீர்வழி பாதைகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் மழைக்காலங்களில் நடவு செய்வதற்காக தங்களது கிராமத்தில் பனை விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தின் மரமான பனை மரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு பயன்களை தரக்கூடிய பனை மரத்தை மழைக்காலங்களில் நடவு செய்ய கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து வருகின்றனர்.இந்த இளைஞர்களின் செயலை சமூக ஆர்வலர்களும் கிராம பொதுமக்களும் பாராட்டினார்கள்.

    • பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பணி இன்று காலை 34 தேசிய மாணவர் படை தஞ்சாவூர் சார்பில்

    நடைபெற்றது.

    இதில் தேசிய மாணவர் படை அதிகாரிகள் லெப்டி னைட்கள் சுரேஷ்பாபு, வசந்த், பேரரசன் மற்றும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, கரந்தை தமிழ்வேள் உமா மகேஸ்வரனார், பூண்டி புஷ்பம் கல்லூரிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

    பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்தனர்.

    புல் பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். தொடர்ந்து பெரிய கோவிலுக்கு வந்தி ருந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு பிளா ஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • மழைநீர் சேகரிப்பு என்பது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

    சேலம்:

    நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மழைநீர் சேகரிப்பு என்பது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. இதனால் மழைக்காலத்திற்கு முந்தைய காலத்தில் தொடங்கி, மழைக்காலம் வரை நீர் சேமிப்பு பணிகள் நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினையை சரி செய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது.

    தாலுகாக்களில்...

    நாடு முழுவதும் 225 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 225 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 225 மாவட்டங்களிலும் 1592 தாலுகாக்களில் இந்த திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வறட்சி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில நீர்வளத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், நீர்வளத்துறை பொறி யாளர்கள், அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்மேலாண்மை குழுக்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டம்

    சேலம் மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள், குளங்கள், பொது மற்றும் தனியார் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தொடர்பான திறந்தவெளி கிணறுகள், பாரம்பரிய நீர்நிலைகள் தொடர்பான பணிகள், மறு பயன்பாட்டுக்குரிய நீர் கட்டமைப்புகள், நீர்வள ஆதாரம் தொடர்பான கசிவு நீர் குட்டைகள், அகழிகள், அடர்வன காடுகளில் மரக்கன்றுகள் நடுதல், நர்சரிகளை பராமரித்தல், அமிர்த குளங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாய்களில் நீர்கால் பகுதியை கண்டறியப்படுகிறது. அந்த பகுதியில் மீள்நிரப்பு புழை அமைக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதற்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் குளங்களை சீரமைக்கும்போது கரைகளை மிகவும் உறுதித்தன்மை கொண்டதாகவும் பலப்படுத்த வேண்டும். மேலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள், விளை நிலங்களில் வரப்பு அமைத்தல், மழை வளம் அதிகரிக்க மரம் வளர்த்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×