search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்பிரமணியசுவாமி கோவில்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரனை வென்று ஆட்கொண்டதால் ஜெயந்திநாதர் என்று அழைக்கப்பட்டார்.
    • முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

    சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்துக்கு புறப்பட்டு வந்ததை நேற்று பார்த்தோம். முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்தார்.

    வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.

    பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "ஜெயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே `செந்தில்நாதர்' என மருவியது. தலமும் `திரு ஜெயந்திபுரம் என அழைக்கப்பெற்று, திருச்செந்தூர்' என மருவியது.

    கோவில் அமைப்பு

    முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாகவும் அமைந்துள்ளன.

    முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

    தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

    இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் `பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. 130 அடி உயரம் கொண்ட இக் கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

    முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எனவே பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

    கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக் கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளை யில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    சூரனை வதம் செய்த பிறகு படையினர் தாகம் தீர்க்க கடலோரத்தில் முருகன் வேலால் குத்தி தண்ணீர் வரவழைத்தார். இன்றும் தண் ணர் வரும் அது, நாழிக்கிணறு எனப்படுகிறது.

    கடலோரத்தில் உள்ள அந்த நாழிக்கிணறு கொஞ்சமும் உப்பாக இல்லாமல் நல்ல தண்ணீ ராக இருப்பது குறிப்படத்தக்கது. இத்தலத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன.

    திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    திருச்செந்தூரில் சண்முகருக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

    தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, `கங்கை பூஜை' என்கின்றனர்.

    மும்மூர்த்தி முருகன்

    திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிப்பார்.

    நான்கு உற்சவர்கள்

    பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    சந்தனமலை

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக் கோவி லாக அமைந்தது போல வும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும். இக்கோவில் கடற்கரை யில் இருக்கும் "சந்தன மலை'யில் இருக்கிறது.

    எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    குரு பெயர்ச்சி

    திருச்செந்தூரில் முருகன் "ஞான குரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.

    இரண்டு முருகன்

    சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகி றார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.

    இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இவருக்குச் செய்யப்படுகிறது. எனவே திருச்செந்தூர் தலத்தில் 2 மூலவர்கள் உள்ளனர்.

    தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

    மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோவிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது.

    அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடை களை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர்.

    இது தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    சக்கரம் கொடுத்த பெருமாள்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள் பிரகாரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.

    நோய் தீர்க்கும் இலை விபூதி

    திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக் கொள்ளச் சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்துத் தொடாமல் போடுவார்கள். விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம்.

    சஷ்டி யாகம்

    திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். இதையடுத்து முருகன் அருள் வேண்டி பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி விரதத்தின் சிறப்புகளை நாளை காணலாம்.

    • வைரக்கற்கள் பதிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    • ஆடிக் கிருத்திகையை முன் னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    வடவள்ளி:

    ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோவில் களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் படி முருகனின் 7-வது படை வீடு என பக்தர்களால் கொண்டாடப்படும் மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நாளை (சனிக்கிழமை) நடை பெறுகிறது.

    அதிகாலை 6 மணிக்கு கோ பூஜை. 6.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறு கிறது.

    அதைத்தொடர்ந்து வைரக்கற்கள் பதிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதைய டுத்து உஷகால பூஜை, மகா தீபாராதனை, காலை 9 மணிக்கு கால சந்தி பூஜை நடக்கிறது.

    ஆடிகிருத்திகை என்பதால் பக்தர்கள் பால்குடம், பால் காவடி எடுத்து மலைப்பாதை வழியாக சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்ப தால் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டு உள்ளன. 12 மணிக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்க ளால் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு அபி ஷேகம் நடைபெறுகிறது.

    உச்சிக்கால பூஜையை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் கோவில் முன்புற மண்டபத்தில் வெள் ளிமயில் வாகனத்தில் எழுந்த ருளி கோவிலை சுற்றி வீதி உலா வருகின்றனர்.

    மாலை 4 மணி அளவில் மீண்டும் மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம், 5 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி -தெய்வானை சமேதராக வீதி உலா, 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மகா தீபாராதனை, மாலை 6 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம், பூஜை, தீபாரா தனை நடைபெறுகிறது.

    ஆடிக் கிருத்திகையை முன் னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 

    ×