search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்"

    • இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸூம், நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸூம், நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். இதன் பின்னர் தனது தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 7-6 (9-7), 7-6 (7-4) என்ற புள்ளி கணக்கில் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.

    இறுதியில் ஜோகோவிச் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பலிவாங்கும் விதமான இந்த இறுதிபோட்டியில் அல்காரஸை வீழ்த்தினார் ஜோகோவிச்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
    • இதில் அமெரிக்கா வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.

    ஆரம்பம் முதலே கோகோ காப் சிறப்பாக ஆடினார். இறுதியில், கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் நாளையுடன் நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் முதல் செட்டை 2-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதினார்.

    முதல் செட்டை கோகோ காப் வென்றார். 2வது செட்டை ஸ்வியாடெக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை

    கோகோ காப் வென்றார்.

    இறுதியில், கோகோ காப் 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை சப்லென்கா 7-6 (7-4) என போராடி வென்றார். சுதாரித்துக் கொண்ட முசோவா அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.

    கடைசியில் முசோவா 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் முசோவா அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதவுள்ளார்.

    அரையிறுதிப் போட்டிகளில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீராங்கனைகள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ், ஜோகோவிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் மெக்ஸ் பர்செலுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் முதல் செட்டை 4-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், உலகின் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-0 6-4 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்வெரேவ், ஹர்காக்ஸ் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் வென்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் நாட்டு வீராங்கனை மார்கெடா வாண்ட்ருசோவாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் 3வது சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நபர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6 (8-6), 6-7 (0-7), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்வெரேவ், ஜோகோவிச், ஹர்காக்ஸ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா தோற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் நாட்டு வீராங்கனை மேரி போஸ்கோவாவுடன் மோதினார்.

    இதில் போஸ்கோவா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் உலகின் 3-ம் நிலை வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

    இதில் ஸ்வெரேவ் 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார்.

    • சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர்,

    செர்பியாவின் லஜோவிக்குடன் மோதினார்.

    இதில் லஜோவிக் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கனடா ஓபன் டென்னிஸ் சாம்பியனை வெற்றார்.

    ×