search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழி இறைச்சி"

    • சென்னையில் கோழிக்கறி விலை சமீப காலமாக கடுமையாக உயர்ந்து வருகிறது.
    • காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கோழிக்கறி விலை சமீப காலமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிறது.

    மேலும் ஆந்திராவின் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் இருந்தும், சென்னைக்கு கறிக்கோழிகள் கொண்டு வரப்படுகிறது. தற்போது கோடை வெயில் அதிகமாக கொளுத்துவதால் கறிக்கோழி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சென்னைக்கு கறிக்கோழிகள் குறைவாகவே கொண்டு வரப்படுகின்றன.

    மேலும் தற்போது மீன்பிடி காலமும் அமலில் உள்ளது. இதனால் மீன்வரத்தும் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் மீன் விலை அதிகமாக உள்ளது. சிறிய வகை மீன்களே கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது.

    மீன்தட்டுப்பாடு நிலவும் நிலையில் ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. எனவே மீன் மற்றும் ஆட்டுக்கறி வாங்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். இதனால் கடந்த 2 மாதங்களாக அசைவ பிரியர்களின் கவனம் கோழிக்கறி பக்கம் திரும்பியுள்ளது.

    இதனால் சென்னையில் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோழிக்கறி மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.170-க்கு விற்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு கிலோ கோழிக்கறி சில்லரை விலையில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு கோழிக்கறி விலை உயரத் தொடங்கியது.

    கடந்த ஏப்ரல் மாதம் கிலோ ரூ.220 -க்கும், மே மாதம் கிலோ ரூ.240-க்கும் விற்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் கோழிக்கறி விலை ரூ.260 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று கோழிக்கறி விலை ரூ.300 ஆக அதிகரித்தது.

    மீன்பிடி தடைகாலம் இந்த வாரம் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மீன் வரத்து அதிகரிக்க தொடங்கும். மேலும் இன்னும் சில நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்பதால் கறிக்கோழி உற்பத்தியும் அதிகரிக்கும். அதன்பிறகு கோழிக்கறி மற்றும் மீன்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
    • கோழி இறைச்சி கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர் :

    அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் கோழி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.250க்கு விற்பனையான கோழி இறைச்சி தற்போது கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.

    இறைச்சி கோழி வி கோப்புபடம். ற்பனையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், வெயில் காலத்தில் உற்பத்தி குறைந்து கோழி இறைச்சி விலை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு வெயில் மிகவும் அதிகம் என்பதால் விலை அதிகரித்துள்ளது. இன்னும் 15 நாட்கள் வரை விலையில் மாற்றமிருக்காது. மழை துவங்கினால் விலை குறையும் என்றார். 

    • மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.
    • கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவீரம் பட்டியைச் சேர்ந்தவர் அருளானந்தம்.விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் பெரிய கோட்டை கிராமத்தில் உள்ளது. அருளானந்தம் சாகுபடி பணிகளுடன் சேர்த்து கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகிறார்.இவர் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க இரண்டு கன்று குட்டிகளை தோட்டத்து சாளையில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலை வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் வயிறு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.

    அதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த அருளானந்தம் உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அதைத் தொடர்ந்து கன்றுக் குட்டிகளுக்கு கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.அதில் தெரு நாய்கள் கடித்ததில் கன்று குட்டிகள் இறந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது.மேலும் ரோந்து பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.வனத்துறையினரின் நடவடிக்கையால் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    சின்னவீரம்பட்டி பகுதியில் வளர்ப்பு கோழி பண்ணைகள் உள்ளது.அதில் இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. ஆங்காங்கே திறந்த வெளியில் வீசி விடுகின்றனர்.இதனால் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் இறந்த கோழிகளை உணவாக்கி வருகிறது.கோழிகள் கிடைக்காத சமயத்தில் மாமிசத்தின் மீது உள்ள மோகத்தால் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை தெருநாய்கள் துன்புறுத்தி வருகிறது. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பண்ணைகளில் இறக்கும் கோழியை முறைப்படி குழி தோண்டி புதைப்பதும் அவசியமாக உள்ளது.அவர்களது அலட்சியமே தெரு நாய்களுக்கு ரத்தவெறி பிடித்து கால்நடைகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறையினர் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் கடமையாகும் என்று தெரிவித்தனர்.

    • கோழிகளை சுத்தமாக பராமரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
    • கடைகளில் விற்கப்படும் கோழிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை பொதுமக்களுக்கு கொடுக்கக்கூடாது என்றார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோழிக்கறி விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடைபெற்றது. 

    இதில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது அவர் பேசியதாவது:- கறிக்கடைகளில் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். கோழிகளை சுத்தமாக பராமரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

    எக்காரணத்தை கொண்டும் கெட்டுப் போன கோழிகளை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது. புரத சத்துள்ள சுகாதாரமான கோழிகளை மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    அதேபோல் கடைகளில் விற்கப்படும் கோழிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை பொதுமக்களுக்கு கொடுக்கக்கூடாது என்றார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ,கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சின்னச்சாமி, ஆலோசகர் ராம்ஜி மற்றும் நிர்வாகிகள், கறி கடை விற்பனையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×