search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொருக்குப்பேட்டை"

    கொருக்குப்பேட்டை அருகே அரிவாளுடன் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகர் பகுதியில் ஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பரத், விக்னேஷ், பாலாஜி என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பொன்னேரியில் உள்ள மது பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தீர்த்துக் கட்ட அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கொருக்குப்பேட்டையில் பள்ளி அருகே பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பேப்பர் குடோன் வைத்தவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். #FireAccident
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை, தியாகப்ப செட்டித் தெருவில் பழைய பேப்பர் குடோன் உள்ளது.

    இதன் அருகிலேயே அரசு உதவி பெறும் நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க் கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இன்று காலை 8 மணியளவில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது பேப்பர் குடோனில் இருந்த கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பற்றி எரிந்தது.

    இதனால் அருகில் இருந்த பள்ளிக்குள் கரும்புகை பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடியில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

    குடோன் இருந்த தெரு மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனத்தை அருகில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் குடோனின் ‌ஷட்டர், ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் குடோனில் இருந்த பேப்பர் பண்டல்கள், பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    தீயின் தாக்கம் காரணமாக கரும்புகை, வெப்பம் அருகில் இருந்த பள்ளிக்கும் பரவியதால் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவ-மாணவிகள் பத்திரமாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தீ விபத்து பற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “பள்ளி அருகே பேப்பர் குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்ளவில்லை. பள்ளிக்கும் தீ பரவி இருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும்.

    பள்ளிக்குள் செல்லும் மாணவ - மாணவிகள் குடோன் அருகில் உள்ள குறுகலான பாதை வழியாகவே சென்று வருகிறார்கள். தீ முழுவதும் பற்றி எரிந்து இருந்தால் மாணவர்கள் வெளியே வர முடியாத நிலையும் உருவாகி இருக்கும். அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பி உள்ளனர்” என்றனர்.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தீ விபத்தில் தப்பிய பள்ளியை கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பேப்பர் குடோன் வைத்தவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    கொருக்குப்பேட்டையில் சோப்பு கம்பெனியில் ரூ.6½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை, கார்நேசன் நகரை சேர்ந்தவர் செல்வம். அதே பகுதியில் சோப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கம்பெனியை பூட்டிச் சென்றனர். நேற்று மதியம் செல்வம் கம்பெனிக்கு வந்தார்.

    அப்போது கம்பெனியின் மேற்கூரை ஆஸ்பெஸ்டா ஷீட் உடைந்து கிடந்தன. கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 6½ லட்சம் மாயமாகி இருந்தது. மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களை சேதப்படுத்தி அதன் பதிவு கருவியையும் கொள்ளை கும்பல் எடுத்து சென்று விட்டனர்.

    அருகில் உள்ள கட்டிடத்தின் வழியாக ஏறிக்குதித்து கொள்ளை கும்பல்  கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. இது குறித்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×