search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம ஊராட்சிகள்"

    • உறவினர்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும்.
    • 3 கிராம ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் வீதம் வளர்ச்சி பணிகள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சி பெண் தலைவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தா லோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பெண் ஊராட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியலமைப்பு சட்டம் 73-வது திருத்தத்தி ன்படி ஊராட்சி அமைப்பு களில் மூன்றில் ஒரு பங்கு பதவியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச்சட்டம் 2016-ன்படி தமிழ்நாட்டில் ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள் ளது. கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கிராம ஊராட்சிகளே ஆகும்.

    கிராம ஊராட்சியில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சுய முடிவெடுத்து தங்களது முத்திரை பதிப்பதோடு, உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சி தலைவர்கள் தங்களுடைய உறவினர்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும்.

    சமத்துவ மயானம் செயல்படும் 3 கிராம ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் வீதம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு விருது தொகையாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக வழங்கப்படுகிறது.

    வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வருவாய்த்துறை மூலமாக நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 7,135 ஆதிதிராவிடர் மக்களுக்கும் 709 ஆதி திராவிட பழங்குடியினர் மக்களுக்கும் ஆக 7,844 நபர்களுக்கு முழுமையாக வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    2,875 ஆதி திராவிடர் மக்களுக்கும் 114 ஆதி திராவிட பழங்குடியினர் மக்களுக்கும் ஆக 2,989 நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. 4,855 (61.9 சதவீதம்) மக்களுக்கு வேலை வழங்கப்படாத நிலையில் ஆதி திராவிடர் மற்றும் ஆதி திராவிட பழங்குடியின மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட விண்ணப்பி க்கப்பட்டிருப்பின் உடனடியாக முன்னுரிமை வழங்கி வேலை வழங்கிட வேண்டும். செயல்படுத்த ப்படும் திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் ஆதிதிரா விடர், ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பணிகள் தேர்வு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் உதவி இயக்கு நர் (கிராம ஊராட்சிகள்) சாந்தி, இந்தியன் வங்கி மேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ), பெண் ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
    • கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    மேற்காணும் அறிவிப்புகளுக்கு இணங்க கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள், செலுத்த வேண்டிய வீட்டுவரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இவ்விணைய தளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன.

    இவ்விணையதளத்தின் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கீழ்காணும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்த இயலும்.

    வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் என அனைத்து கட்டிட அனுமதிகளும் இணைய வழியாக மட்டுமே தரப்பட வேண்டும். இதற்காக http://online.ppa.tn.gov.in/ என்ற முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது.

    ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கிடும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அதிகாரிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலம்தான் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
    • நாளை 1-ந்தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் நாளை 1-ந்தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    எனவே, கிராம பொதுமக்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×