என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில்  கிராமசபை  கூட்டங்கள் - நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    திருப்பூா் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் - நாளை நடக்கிறது

    • ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
    • நாளை 1-ந்தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் நாளை 1-ந்தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    எனவே, கிராம பொதுமக்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×