search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிடா"

    • இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா’.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கிடா' (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.


    மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ளது 'கிடா' திரைப்படம். இப்படம் வெளியாகுவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 'கிடா' திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிடா.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார்.

    அறிமுக இயக்குனர் ரா.வெங்கட்  இயக்கத்தில்,  பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் கிடா (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.

    மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள கிடா திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது,

    சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கிடா திரைப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை  நடக்கும் மெல்போர்னின் 14வது இந்திய திரைப்பட விழாவில் (14th Indian film festival of Melbourne) திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிடா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பலரின் பாராட்டுக்களை பெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

    • ராட்சத கிடாவை பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
    • கிடா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாகவும், வியப்பாக இருப்பதாகவும் உள்ளது.

    3 கொம்புகளை கொண்ட ராட்சத கிடாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திபிகன் என்பவரது டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

    வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் சிலர் இறைவனின் படைப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசியம் இந்த ஆடு என கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், இந்த கிடா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாகவும், வியப்பாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர்.

    • சோழவந்தான் அருகே கிடா முட்டு சண்டை நடந்தது.
    • கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவையொட்டி இன்று கிடா முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாக்கள் குவிந்தன.

    கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி, பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். அஜித், குண்டுமணி வரவேற்றனர். உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளருமான கதிரவன் தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றதலைவர் கலியுக நாதன், ஆர்.கே.சாமி, இளைஞரணி விக்னேஷ் ஆகியோர் பேசினர். பவித்திரன் நன்றி கூறினார்.

    இந்த கிடா முட்டு சண்டையில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து இருந்து 85 கிடாக்கள் கலந்து கொண்டன. கிடாக்களுக்கு கமிட்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. டி.எஸ்.பி. நல்லு தலைமையில் 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா’.
    • இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

    ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் 'கிடா'. இப்படத்தில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    கிடா

    மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும் அவனது தாத்தா மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள 'கிடா' திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

    இத்திரையிடலின் போது மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். இந்நிலையில் இப்படம் சென்னையில் நடைபெறவுள்ள 20-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படவிழா டிசம்பர் 15 முதல் டிசம்பர் 22 வரை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது.
    • இந்த விழாவில் சூர்யாவின் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.

    மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஓவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும். கோவாவில் நேற்று தொடங்கியிருக்கும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 7 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.

     

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    குறிப்பாக இந்திய அளவில் சிறந்த கதை அம்சம் கொண்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விழாவில் ஒளிபரப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 20 ஆவணப்படங்கள் மற்றும் குறும் படங்கள் ஆகும். இந்த விழாவில் தமிழில் த.செ.ஞானவேல் இயக்கி, சூர்யா நடித்திருந்த ஜெய்பீம் திரைப்படமும், கமலகண்ணன் இயக்கிய குரங்குபெடல் திரைப்படமும், ரா.வெங்கட் இயக்கிய கிடா என்ற திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

    ×