கிடா கிடைக்காம அலையும் போது எந்த சாமி உதவி பண்ணிச்சி- வைரலாகும் டிரைலர்

இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா’.இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
கிடா கிடைக்காம அலையும் போது எந்த சாமி உதவி பண்ணிச்சி- வைரலாகும் டிரைலர்
Published on

அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கிடா' (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ளது 'கிடா' திரைப்படம். இப்படம் வெளியாகுவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 'கிடா' திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com