கோவா திரைப்பட விழாவில் சூர்யா திரைப்படம் திரையிட தேர்வு

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது.இந்த விழாவில் சூர்யாவின் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.
சூர்யா
சூர்யா
Published on

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஓவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும். கோவாவில் நேற்று தொடங்கியிருக்கும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 7 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.

ஜெய்பீம்
ஜெய்பீம்

ஜெய்பீம்

குறிப்பாக இந்திய அளவில் சிறந்த கதை அம்சம் கொண்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விழாவில் ஒளிபரப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 20 ஆவணப்படங்கள் மற்றும் குறும் படங்கள் ஆகும். இந்த விழாவில் தமிழில் த.செ.ஞானவேல் இயக்கி, சூர்யா நடித்திருந்த ஜெய்பீம் திரைப்படமும், கமலகண்ணன் இயக்கிய குரங்குபெடல் திரைப்படமும், ரா.வெங்கட் இயக்கிய கிடா என்ற திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com