என் மலர்
நீங்கள் தேடியது "கணவன் மரணம்"
- அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.
- மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், பஹ்ரைச்சிரியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
கணவர் இறந்துவிட்டதால் கர்ப்பிணி பெண் மட்டும் தனியாக வசித்து வந்தார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.
வலி தாங்க முடியாத அவர் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வயிற்றை கிழித்துக்கொண்டார். அவரது வயிற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. கத்தியால் ஆழமாக கிழித்து கொண்டதால் அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.
மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். காட்டன்பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டார். இதில் இருந்து சுமதி மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கடன் தொல்லைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுமதி மற்றும் அவரது மகள் ஆகிய 2 பேரும் நேற்று விஷத்தை குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகநேரி காமராஜபுரத்தை சேர்ந்த செல்வி என்பவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டி ஜவகர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி தவமணி (வயது38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்து விட்டார். அன்று முதல் தவமணி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார். கணவர் இல்லாத உலகத்தில் தானும் இருக்க கூடாது என்று தற்கொலை செய்து கொள்வது என தீர்மானித்தார்.
வீட்டிலேயே விஷத்தை குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தவமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனி செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






