search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட பூமி பூஜை"

    • திருமங்கலத்தில் காய்கறி மார்க்கெட் கட்டிட பூமி பூஜை நடந்தது.
    • நகராட்சிக்கு சொந்தமான தரைவாடகை கட்டிடத்தில் 40 கடைகள் இயங்கி வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் சின்னக் கடை வீதியில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இதற்குள் மீன்மார்க்கெட் தனியாகவும் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த மார்க்கெட் மிகவும் குறுகலாகவும் இடப்பற்றாக் குறையுடனும் இயங்கி வருகிறது.

    இதில் நகராட்சிக்கு சொந்தமான தரைவாடகை கட்டிடத்தில் 40 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டி காய்கறி வியாபாரிகளின் நலனை பாதுகாக்க நகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதியதாக 40 கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டுஒப்புதல் பெறப்பட்டது.

    இதனை தொடர்ந்து இதற்கான 40 கடைக ளுக்கான பூமிபூஜை மார்க்கெட்டில் வளாகத்தில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளார் ரத்தினவேல் முன்னிலையில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது. இதில் நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், தி.மு.க. கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், திருக்குமார், விரக்குமார், சின்னசாமி, வினோத், சாலியா உல்பத், சரண்யா ரவி, ரம்ஜான்பேகம்ஜாகீர், சங்கீதா, காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் நகராட்சி ஓவர்சிஸ் ராஜா, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க புதிய கட்டிடத்திற்க்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • 25 ஆண்டு காலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி,புதிய கட்டிடத்திற்க்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது.

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.25 ஆண்டு காலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி, கட்டடம் கட்ட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான பணிகளை சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், இறுதியாக எருத்துக்காரன்பட்டி ஊராட்சி, ராஜகணபதி நகரில், தேர்வு செய்யப்பட்ட இடத்தில், கட்டுமானப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.இதற்காக நடைபெற்ற பூமி பூஜைக்கு, அச்சங்கத்தின் மாவட்ட கிளைத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இடம் வழங்கிய எருத்துக்காரன்பட்டி ஊராட்சித் தலைவர் சிவா, புரவலர் சீத்தாராம சுப்பிரமணியன், பேராசிரியர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில், செந்துறை ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்களான தங்கசிவமூர்த்தி, சிவசக்தி ஆகியோர் சேர்ந்து கட்டட நிதியாக ரூ.1 லட்சத்தை கிளைத் தலைவர் ஜெயராமனிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் எஸ்.எம். சந்திரசேகர், செல்வராஜ், பொருளாளர் எழில், செயலர் ஸ்டீபன், துணை புரவலர் சகானா காமராஜ், முன்னாள் தலைவர் நல்லப்பன், மாநில பொதுக் குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் சுமங்கலி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




    • கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    துணைத் தலைவர் ராஜசேகர், தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரன், உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பவானந்தன், சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தன்,

    சுரேஷ், இ.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜ்குமார், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல், ஒன்றிய குழு துணைத் தலைவர் மருதையம்மாள் சாஸ்தா, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஊராட்சி செயலர் ஜெயபாண்டி கலந்து கொண்டனர்.

    • பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.18 லட்சத்து 14 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை விழா நடைபெற்றது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள சாண்டலார்புரம் அரிஜன பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.18 லட்சத்து 14 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அதனை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு குல்லலக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் யசோதை தலைமை தாங்கினார். பால் கூட்டுறவு சங்கத் தலைவர்முருகன் வரவேற்றார்.

    முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பஞ்சவர்ணம், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை, குல்லலக்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் குணசேகரன் தி.மு.க.பிரமுகர் பெரியசாமி பால் கூட்டுறவு சங்க துணை தலைவர் நாகேஸ் என்ற பிச்சை மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×