search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhoomi poojai"

    • தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.
    • 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சபரி நகர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து வடுகபாளையம் ரோடு மீன் குட்டை வரை 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையும், சித்தம்பலம் புதூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழாவும் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு சித்தம்பலம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரி வரவேற்றார். திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தும், சாலை பணியை துவக்கி வைத்தார்.இதில் பல்லடம் முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர்,சிவசக்தி சுப்பிரமணியம்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பானுப்பிரியா,வார்டு மெம்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பரமசிவம், ராஜேஸ்வரன், பானுமதி,பாலகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு விநாயகர் கோவில் முன்பு பூமிபூஜை நடைபெற்றது.
    • தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் 15 வது மானிய குழுவின் கீழ் இந்திரா நகர் பகுதியில் சாக்கடையுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு விநாயகர் கோவில் முன்பு பூமிபூஜை நடைபெற்றது.

    கட்டக்காமன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரிபாண்டி,ஒன்றிய கவுன்சிலர் பெனினாதேவிசரவணன், துணைத்தலைவர் செல்விமகாலிங்கம், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சரவணன்,ஊராட்சி செயலர் பெருமாள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒட்டன்சத்திரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டி, இடையகோட்டை, புலியூர்நத்தம், மார்க்கம்பட்டி, எல்லப்பட்டி, சிந்தலப்பட்டி, சின்னக்கம்பட்டி, கேதையுறும்பு, அம்பிளிக்கை,மண்டவாடி ஆகிய ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை அமைத்தல், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு, புதிய ரேசன் கடை கடை திறப்பு,

    கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல்,மெட்டல் சாலை அமைத்தல், தடுப்பணைகள் அமைத்தல் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அடிக்கல் நாட்டுதல், பேவர்பிளாக் அமைத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு மற்றும் பூமிபூஜை நடைபெற்றது.

    இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசினார். சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி, ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், ஒன்றியக் குழு பெருந்தலைவர் அய்யம்மாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விராலிபட்டி ஊராட்சியில ரேசன் கடை, சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை போன்றவை மேம்பாடு செய்யவும் பூமிபூஜை நடந்தது.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் பா.விராலிப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம், பண்ணைப் பட்டி சமத்துவ மயானத்தில் காத்திருப்போர்கூடம், மயான கூடம், சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை போன்றவை மேம்பாடு செய்யவும்பூமிபூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்திட்டப் பணிகளை பொக்லைன் மூலம் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துப்பாண்டி,ஊர் பிரமுகர்கள் வரதராஜன், நரசிம்மன், ஊராட்சி செயலாளர் கண்ணன்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    • பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.18 லட்சத்து 14 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை விழா நடைபெற்றது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள சாண்டலார்புரம் அரிஜன பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.18 லட்சத்து 14 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அதனை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு குல்லலக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் யசோதை தலைமை தாங்கினார். பால் கூட்டுறவு சங்கத் தலைவர்முருகன் வரவேற்றார்.

    முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பஞ்சவர்ணம், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை, குல்லலக்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் குணசேகரன் தி.மு.க.பிரமுகர் பெரியசாமி பால் கூட்டுறவு சங்க துணை தலைவர் நாகேஸ் என்ற பிச்சை மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×