search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தம்பலம் ஊராட்சியில் ரூ.47 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை
    X

    செல்வராஜ் எம்.எல்.ஏ., பணிகளை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    சித்தம்பலம் ஊராட்சியில் ரூ.47 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை

    • தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.
    • 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சபரி நகர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து வடுகபாளையம் ரோடு மீன் குட்டை வரை 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையும், சித்தம்பலம் புதூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழாவும் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு சித்தம்பலம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரி வரவேற்றார். திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தும், சாலை பணியை துவக்கி வைத்தார்.இதில் பல்லடம் முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர்,சிவசக்தி சுப்பிரமணியம்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பானுப்பிரியா,வார்டு மெம்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பரமசிவம், ராஜேஸ்வரன், பானுமதி,பாலகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×