விராலிப்பட்டியில் ரேசன் கடை கட்ட பூமி பூஜை

விராலிபட்டி ஊராட்சியில ரேசன் கடை, சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை போன்றவை மேம்பாடு செய்யவும் பூமிபூஜை நடந்தது.நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
ரேசன்கடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
ரேசன்கடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
Published on

வத்தலக்குண்டு:

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் பா.விராலிப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம், பண்ணைப் பட்டி சமத்துவ மயானத்தில் காத்திருப்போர்கூடம், மயான கூடம், சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை போன்றவை மேம்பாடு செய்யவும்பூமிபூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்திட்டப் பணிகளை பொக்லைன் மூலம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துப்பாண்டி,ஊர் பிரமுகர்கள் வரதராஜன், நரசிம்மன், ஊராட்சி செயலாளர் கண்ணன்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com