கட்டகாமன்பட்டி ஊராட்சியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை

ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு விநாயகர் கோவில் முன்பு பூமிபூஜை நடைபெற்றது. தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள்.
பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள்.
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் 15 வது மானிய குழுவின் கீழ் இந்திரா நகர் பகுதியில் சாக்கடையுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு விநாயகர் கோவில் முன்பு பூமிபூஜை நடைபெற்றது.

கட்டக்காமன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரிபாண்டி,ஒன்றிய கவுன்சிலர் பெனினாதேவிசரவணன், துணைத்தலைவர் செல்விமகாலிங்கம், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சரவணன்,ஊராட்சி செயலர் பெருமாள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com