search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் திட்டம்"

    • 7 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
    • ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றைச் செய்ய குறைந்த வட்டி விகிதத்தில் நிதியுதவி வழங்கி வருகிறது.

    அந்த வகையில், தனி நபர்கள் மற்றும் பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 7 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

    மீதமுள்ள 93 பயனாளிகளுக்கு சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள மகளிர் மேம்பாட்டுக்கழகத்தின் அன்னை தெரசா வளாக கூட்டரங்கில் நடைபெறும் விழாவில், அமைச்சர் ராஜ கண்ணப்பன் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கினார்.

    இத்திட்டத்தின் மூலம், பயனாளிகள் வளையல் வியாபாரம், பால் பண்ணை, ஆடு வளர்ப்பு, பட்டு நெசவு, தையல் தொழில், அழகு நிலையம், பலசரக்கு கடை, உணவகம், துணிக்கடை, தேங்காய் மற்றும் காய்கறி வியாபாரம் போன்ற தொழில்களை மேற்கொள்ள கடனுதவி வழங்கப்படுகிறது. இக்கழகத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் காஜா முகைதீன், இயக்குநர் அணில் மேஷ்ராம், ஆணையர் சம்பத் கலந்து கொண்டனர்.

    தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழக பயிற்சி நிலையத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியும், 50 தொழிலாளர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வெ.கணேசன், கலெக்டர் ராகுல்நாத், பாலாஜி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் மேம்பாட்டு கழகத்தால், சிறப்பு கடன் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
    • பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது.

    ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒரு புறம் குடும்பத்தை கவனித்துக்கொண்டு இன்னொரு புறம் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்கள் சமூகத்தில் முன்னேறி செல்கின்றனர். சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது.

    பெண்கள் அனைத்து துறையிலுமே முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனினும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சுயமாக தொழில் தொடங்க ஆர்வமும் இருந்து, அதற்கு வழியில்லாத பெண்களுக்கு, தமிழக அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    அந்தவகையில், பெண்கள் மேம்பாட்டு கழகத்தால், சிறப்பு கடன் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்தின்படி, பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது. அதுவும் மிக மிக குறைந்த வட்டியில். இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

    25 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அவர்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விதவைப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த வருமான வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. பேக்கரி, கண்ணாடி தயாரிப்பு, கேண்டீன், கேட்டரிங், பியூட்டி பார்லர், காபி பவுடர் தயாரிப்பு உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பெண்கள் கடன் பெறலாம். வட்டியே இல்லாமல் கூட இத்திட்டத்தில் கடன் கிடைக்கும்.

    இதுமட்டுமல்லாமல் அரசிடமிருந்து 30 சதவீத மானிய உதவியும் கிடைக்கிறது. இப்படி பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண் சமுதாய வளர்ச்சிக்காகவும், தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும்நிலையில், பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்காக, குறைந்த வட்டியில் மீண்டும் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகை அளவானது, தொழில் முனைவோர் தரக்கூடிய திட்டத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    உத்யோகினி திட்டம்

    பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட இத்திட்டம் கிராமப்புறம் மற்றும் முன்னேற்றம் அடையாத பகுதிகளில் உள்ள பெண்களை ஊக்குவித்து தொழில்முனைவோராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது இத்திட்டம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாகுபாடின்றி வட்டியில்லா கடன்களை வழங்குகிறது ஒவ்வொரு மாவட்டத்தின் நகராட்சி கிளைகளிலும் கடனுக்காக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மளிகை, பேக்கரி, ஊறுகாய் வணிகம் போன்ற 8 வகையான சிறு தொழில்களுக்கான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகின்றது. இந்த கடன்களைப் பெற 25 முதல் 62 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

    அன்னபூர்ணா திட்டம்

    மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்க இத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கடனுக்கு அப்ரூவல் வந்தபின் முதல் தவணையை செலுத்தத் தேவையில்லை. கடனை எளிய தவணை முறையீல் 36 மாதங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தலாம். சந்தை நிலவரம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து வட்டி விகிதம் மாறலாம்.

    முத்ரா யோஜனா திட்டம்

    பெண்களின் நிலையை மேம்படுத்த உதவும் கடன் திட்டம். பெண்களின் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி, வர்த்தகம், சேவை என மூன்று பிரிவுகளின் கீழ் ரூ. 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 36 மாதங்கள் அல்லது அதற்குமேல் தவணைக் காலத்தை நீடிக்கலாம்.

    தேனா சக்தி திட்டம்

    இது பொதுத்துறை வங்கியின் திட்டம். இத்திட்டத்தின் கீழ் சில்லறை வர்த்தகம், குறு மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. கடன் தொகையாக ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு பிரிவிற்கும் கடன்களுக்கான விதிமுறைகள் மாறுபடும். இத்திட்டத்தில் கடன் பெறும் பெண் தொழில்முனைவோருக்கு வட்டியில் 0.25  சதவீதம் விலக்கு கிடைக்கும்.

    யூகோ மகிளா பிரகதி தாரா திட்டம்

    பெண் தொழில்முனைவோருக்கு சக்தியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி திறனை மேம்படுத்த, செயல்பாட்டு மூலதனத்திற்காக 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம். புதியா தொழில் தொடங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் கடனை பயன்படுத்திக் கொள்ளலாம். 2 லட்சம் வரை கடன் பெற எந்த வரம்பும் இல்லை ஆனால், 2லட்சம் முதல் 25 லட்சம் வரை கடன் பெற, உங்கள் தொழிலில் எதிர்பார்க்கப்படும் ஆண்டு விற்றுமுதலில் 15 சதவீதம் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால் அதற்குமேல் வாங்குவதற்கு 15 சதவீதம் லாபம் வழங்குப்பட வேண்டும்.

    ஸ்த்ரீ சக்தி திட்டம்

    இத்திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு சில சலுகைகள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் திட்டமாக உள்ளது. பிசினஸில் பெரும்பான்மை பங்கை கொண்டிருக்கும் பெண்கள் இத்திட்டத்தில் கடன் பெறலாம். மேலும், இந்த பெண்முனைவோர் அவர்கள் வாழும் மாநிலத்தில் தொழில்முனைவு வளர்ச்சி திட்டத்தின் கீழ் இணைந்திருக்க வேண்டும் இத்திட்டத்தில் ரூ. 2 லட்சத்துக்கு அதிகமான கடன்களுக்கு வட்டியில் 0.05% விலக்கு பெறலாம்

    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடன் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
    • கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ அலுவலகம் மூலம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒன்றிய மற்றும் மாநில அரசின் சுயவேலைவாய்ப்பிற்கான கடன் திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மானியத்துடன் கூடிய சிறு குறு தொழிற் கடன்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் தொழில் முனைவோருக்கான அரசின் கடனுதவி திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் குறித்த தொழில் விபரங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 11-ந் தேதி தாராபுரம் , 14-ந் தேதி பல்லடம், 15-ந் தேதி உடுமலைப்பேட்டை, 16-ந் தேதி பொங்கலூர், 19-ந் தேதி அவிநாசி, 21-ந் தேதி மடத்துக்குளம், 23-ந் தேதி, வெள்ளகோவில், 24-ந் தேதி குண்டடம், 25-ந் தேதி காங்கேயம், 28-ந் தேதி ஊத்துக்குளி, 29-ந் தேதி மூலனூர், 30-ந் தேதி குடிமங்கலம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக அரசு மானியத்துடன் கடன் பெற விரும்புவோர் ஆதார் கார்டு நகல், சாதிச் சான்றிதழ் நகல், கல்விச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வர்த்தகப் பெருமக்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயனடையும்படி மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    • லோன் மேளா தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி, நகர்ப்பபுற கூட்டுறவு வங்கிகளில் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும்.
    • விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்க தொடர்புடைய ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பொருளாதார மேம்பாடு அடைந்து பயன் பெறலாம்.

    தரங்கம்பாடி :

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறைமாவ ட்டத்தில் பிற்படுத்த ப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டிற்கான TABSEDCO மற்றும் TAMCO கழக திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நகர்ப்பபுற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கிட ஏதுவாக லோன் மேளா நடைபெற்று வருகிறது.

    லோன் மேளா தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி, நகர்ப்பபுற கூட்டுறவுவங்கிகளில் வருகிற 15.8.2022 வரை நடைபெறும். மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் லோன் மேளா வருகிற 10.8.2022 வரை நடைபெறும்.

    மேற்படி கழகம் வழங்கும் கடன் திட்டம் மூலம் பயன் பெற விரும்புவோர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்க தொடர்புடைய ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பொருளாதார மேம்பாடு அடைந்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×