search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா வியாபாரி கொலை"

    • பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் என எதிர் தரப்பு கும்பல் தினேசை அழைத்துள்ளனர்.
    • கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பத்மினிகார்டன் 1-வது வீதி பகுதியில் நேற்று இரவு ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ராக்கியா பாளையம் ஜெய்நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ தினேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது.

    அவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் அவர் சிறையும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் சிறையில் இருந்த போது, அவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாறி முன்விரோதமும் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று இந்த பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் என எதிர் தரப்பு கும்பல் தினேசை அழைத்துள்ளனர். அவரும் சென்றுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்தில் மது அருந்திய கும்பல் தினேசை அரிவாளால் வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் குறித்து முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
    • கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரத்தை அடுத்த படப்பை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது24).

    இவர் படப்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யும் மெயின் டீலராக செயல்பட்டு வந்தார். மேலும் முரளி மீது பல்வேறு குற்ற வழக்குகள் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிஅளவில் அதேபகுதி அண்ணா நகர் அருகே குளக்கரையை ஒட்டி உள்ள வடுகாத்தம்மன் கோவில் அருகே முரளி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் விரைந்து வந்து முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக முரளியுடன் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் யார்?யார்? அவருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்துருவை தப்பி ஓட விடாமல் மடக்கிய கும்பல் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.
    • பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் அடுத்த, தைலாவரம் பகுதியை சேர்ந்தவர் வைகோ என்கின்ற சந்துரு(வயது28). கஞ்சா வியாபாரி. இவரது மனைவி வினிதா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    சந்துரு மீது 3 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு அவர், வீட்டில் மனைவியுடன் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது, 8 பேர் கும்பல் திடீரென சந்துருவின் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் சந்துருவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துருவின் மனைவி வினிதா அவர்களை தடுக்க முயன்றார்.

    ஆனாலும் சந்துருவை தப்பி ஓட விடாமல் மடக்கிய கும்பல் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தடுக்க முயன்ற வினிதாவின் கையிலும் பலத்த வெட்டு விழுந்தது.

    உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலையாளிகள் விட்டு சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொலையுண்ட சந்துரு நடுவீரப்பட்டை சேர்ந்த பிரபல ரவுடியின் கூட்டாளியாக இருந்து உள்ளார். சமீபத்தில் அந்த ரவுடியின் கூட்டாளிகள் மிரட்டல் விடுத்து இருந்ததாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வீடு புகுந்து மனைவி கண்முன் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    ×