search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரக்கடை"

    • 6 மருந்துகளுக்கு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
    • 1,220 லிட்டர் அளவுக்கு மருந்து விற்பனைக்கு இருந்தது.

    உடுமலை :

    விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்கும் நோக்கில் நச்சு த்தன்மை நிறைந்த பூச்சிக் கொல்லி மருந்து களான மோனோகுரோ ட்டோபாஸ், புரோபெனோ பாஸ், அசிபேட், சைபர்மெ த்ரின், குளோர்பைரிபாஸ் என 6 மருந்துகளுக்கு அரசு தடை விதித்து அரசாணை வெளி யிட்டது.

    ஆனால் அபாயக ரமான பூச்சி க்கொல்லி மருந்துகளை அரசு தடை செய்த போதும் திருப்பூரில் உள்ள உரக்கடைகளில் அவற்றின் விற்பனை தொடர்கிறது என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து விவசாய சங்கத்தினர் சிலர் கூறியதாவது:- விவசாயிகளின் பாது காப்பு கருதி பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் சில கடைகளில் அவை தொ டர்ந்து விற்கப்படுகின்றன. அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தென்னை விவசாயிகள், வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க பயன்படுத்துகின்றனர்.தென்னையில் தேங்காய் அளவு அதிகரிக்க இந்த மருந்து உதவுகிறது. சில வினியோகஸ்தர்கள், தென்னந்தோப்பு அதிகமு ள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆன்லைன் வாயிலாக அத்தகைய மருந்துகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் மாரியப்பன் கூறியதாவது:- அரசால் தடை செய்ய ப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

    திருப்பூர் மாவட்டத்தில் 208 உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துவிற்பனைக் கடைகளில்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அரசால் தடை செய்ய ப்பட்ட,மோனோகு ரோட்டோபாஸ் 717 லிட்டர், புரோபெனோபாஸ் 160 லிட்டர், அசிபேட் 78.35 லிட்டர் புரோபெ னோபாஸ் மற்றும் சைபர்மெத்ரின் இணைந்த மருந்து 39.2 லிட்டர்., குளோர்பைரிபாஸ் மற்றும் சைபர்மெத்ரின் இணைந்த மருந்து 53.85 லிட்டர்., குளோர்பைரிபாஸ் மருந்து 179.55 லிட்டர்., என 1,220 லிட்டர் அளவுக்கு மருந்து விற்பனைக்கு இருந்தது. அரசின் தடை உத்தரவுக்கு பின் இந்த மருந்துகளை விற்ககூடாது என உத்தரவு வழங்க ப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
    • உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    குன்னத்தூரில் யூரியா உரம் வாங்க சென்ற விவசாயிகளிடம் மற்றொரு உரத்தை வாங்க வற்புறுத்திய உரக்கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் எழுந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, குன்னத்தூர் வட்டாரங்களில் சோளப்பயிர் தற்போது முளைத்து வளரத் தொடங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி யூரியா உரம் சீராக கொடுத்தால் பயிர் நல்ல வளர்ச்சி அடையும் என்று விவசாயிகள் எண்ணி, யூரியா உரம் வாங்க அருகில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு சென்றால் அங்கு இருப்பு இல்லை.

    இந்நிலையில், தனியார் உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர். குன்னத்தூரில் உள்ள உரக்கடைக்கு, விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், அங்கு பணியாளர் யூரியா உரம் தனியாக தர முடியாது. மற்றொரு உரமும் சேர்ந்து வாங்கினால்தான் தர முடியும். இல்லையென்றால் இரண்டுக்கும் சேர்ந்து ரூ.1100 கொடுத்தால்தான் யூரியா 1 மூட்டை தருவேன் என்று கறாராக சொல்லி அனுப்பிவிட்டார். இது போன்று விவசாயிகள் பலரும் ஏமாற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக முறையிட்டபோது, யாரிடம் வேண்டுமானால் புகார் அளித்து கொள்ளுங்கள் என பேசினார். யூரியா உரம் கேட்டுச்செல்லும் விவசாயிகளிடம் தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிற உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான உரங்கள் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கும், வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் புகார் அனுப்ப உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • சுந்தர மூர்த்தி வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார்.
    • அப்போது கடையின் கதவு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடி பாளையம் பகுதியை சேர்ந்த வர் சுந்தரமூர்த்தி (வயது 43). இவர் அந்த பகுதியில் உரக் கடை வைத்து நடத்தி வரு கிறார். இவர் தினமும் காலை கடையை திறந்து இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு சுந்தர மூர்த்தி வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார்.

    அப்போது கடையின் கதவு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்த ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் வங்கி பாஸ் புக், செக் புக் ஆகியவை திருட ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சுந்தரமூர்த்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோபி செட்டி பாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடு பட்டது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தியாகதுருகம் பகுதி உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி எச்சரிக்கை விடுத்தாார்.
    • அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பகுதியில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையொட்டி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முறையாக உர உரிமம் பெற்று விற்பனை செய்யப்படுகிறதா? உரம் இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு உரக்கடையில் இருப்பு உள்ளதா? மேலும் விற்பனை முனையக் கருவியில் உள்ளவாறு உரங்கள் இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களை விற்பனை செய்யும் போது அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் கடைகளுக்கு முன்பாக ரசாயன உரங்களின் விலை பட்டியலை வைக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு, வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×