உரக்கடை கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

சுந்தர மூர்த்தி வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார்.அப்போது கடையின் கதவு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உரக்கடை கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடி பாளையம் பகுதியை சேர்ந்த வர் சுந்தரமூர்த்தி (வயது 43). இவர் அந்த பகுதியில் உரக் கடை வைத்து நடத்தி வரு கிறார். இவர் தினமும் காலை கடையை திறந்து இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு சுந்தர மூர்த்தி வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் கதவு உடைக்க ப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்த ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் வங்கி பாஸ் புக், செக் புக் ஆகியவை திருட ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சுந்தரமூர்த்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து கோபி செட்டி பாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடு பட்டது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com