search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியன் ஆயில்"

    • தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20’ எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.
    • வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த ‘காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.

    சென்னை:

    இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் - புதுச்சேரி மாநிலங்களுக்கான மண்டல தலைவர் வி.சி.அசோகன் சென்னையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, தமிழகம் மிக முக்கிய சந்தையாக உள்ளது. எங்கள் நிறுவனத்தால், கடந்த ஆண்டில் 10 சதவீதம் எத்தனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோலுடன், சேர்க்கப்பட்டுள்ளது. 2025 -க்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை தயாரிக்க அரசு ஆணைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் இதுவரை 26 பெட்ரோல் நிலையங்களில் இ - 20' எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது. வரும் மார்ச்சுக்குள் கூடுதலாக, 8 பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும்.

    தமிழகத்தில் விரைவில் பல்வேறு திட்டங்களில் 54,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அதில், 35,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகையில் 1,300 ஏக்கரில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்தி கரிக்கும் திறனில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

    அங்கு பி.எஸ். 4 திறனில் பெட்ரோல், டீசல், 'பாலி புரோப்லீன்' உற்பத்தி செய்யப்படும்.

    விழுப்புரம், ஆசனூரில், 466 கோடி ரூபாயில் பெட்ரோல், டீசல் முனை யம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் வல்லூரில், 724 கோடி ரூபாயில் ஒரு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. எண்ணூர் துறைமுகத் தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் முனையம், 921 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.

    வீடுகளுக்கு குறைந்த எடையில் அதிக பாதுகாப்பு நிறைந்த 'காம்போ சிட் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றது.

    இவ்வாறு அவர்கூறினார்.

    பேட்டியின் போது இந்தியன் ஆயிலின் தென் மண்டல, மண்டல சேவைகள் செயல் இயக்குனர் தனபாண்டியன், தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம் போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.
    • சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்தநிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம்போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த சிலிண்டர் பாலிமர் பைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலி எத்திலின் தெர்மோ பிளாஸ்டிக்காலான வெளிப்புற ஜாக்கெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதித்தன்மை கொண்ட இந்த சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், தற்போது பயன்பாட்டில் உள்ள இரும்பிலான உருளையை ஒப்பிடுகையில் இந்த சிலிண்டர் 50 சதவீதம் எடை குறைவானது. எனவே, பெண்களே இந்த சிலிண்டரை எளிதாக கையாள முடியும். அத்துடன், இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது. இப்புதிய சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 பாதுகாப்பு வைப்புத்தொகையாக (செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும்.

    பழைய வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய காப்புத்தொகையுடன், புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அத்தொகையை செலுத்தினால் போது மானது.

    மேலும், புதிய சிலிண்டர்களை பெற முன்பதிவு செய்ய 8655677255 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×