search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு காஷ்மீர்"

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும் என ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். #PulwamaAttack #UNHRC #PoKActivists
    ஜெனிவா:

    சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் சபை கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர்கள், பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரு பிராந்தியத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி தலைவர் சர்தார் சவுகத் அலி காஷ்மீரி பேசும்போது, பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக போரை நடத்துவதாக குற்றம்சாட்டினார்.

    ‘இதுபோன்று பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஊக்குவித்தால் நமது நாடு மதங்கள் மற்றும் இனங்கள் வாரியாக ஆயிரம் துண்டாக பிளவுபட்டுவிடும். எனவே பாகிஸ்தான் தனது மனநிலையை மாற்றி பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி ஐநா மனித உரிமைகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்தவேண்டும்’ என்றும் அவர் கூறினார்.



    மற்றொரு மனித உரிமை ஆர்வலர் மிஸ்பார் ஹசன் பேசும்போது, ‘புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்கு ஆயத்தமானதால் உலகமே அதிர்ச்சியடைந்தது. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதால், ஏதாவது தவறு நடந்தால் உலகிற்கே பேரழிவு ஏற்படும். எனவே, பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். #PulwamaAttack #UNHRC #PoKActivists
    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் அரசு உதவியுடன் முகாம் அமைத்துள்ள பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

    பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்து நாசவேலை சம்பவங்களில் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் பாதுகாப்பு படை மீது பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தாக்கினார்கள். இதில் 19 வீரர்கள் பலியானார்கள்.

    இதற்கு அந்த மாத இறுதியிலேயே இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் அட்டாக்) நடத்தி பதிலடி கொடுத்து எல்லையை ஒட்டி இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தனர். இதில் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உதவியுடன் பயங்கரவாதிகள் முகாம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. புதிதாக 8 பயங்கரவாதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய படை துல்லியமாக தாக்குதல் நடத்திய லிபா பள்ளத்தாக்கில் மீண்டும் பயங்கரவாதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் லிபா, சகோதி, பராக் கோட், ‌ஷர்டி, ஜுரா ஆகிய பகுதிகளிலும், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பராக்கோட் மற்றும் கதுவா அருகே உள்ள பகுதிகளிலும் முகாம்கள் அமைத்துள்ளனர்.

    இந்த முகாம்களில் உள்ள 230 பயங்கரவாதிகள் எல்லை கோட்டு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. 27 இடங்கள் வழியாக அவர்கள் ஊடுருவ இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    கடந்த ஒரு மாதமாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைத்து விதமான பயிற்சிகளையும் பெற்ற அவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் கடந்த மாதம் 18-ந்தேதி பதவியேற்றார். அவர் பொறுப்புக்கு வந்த பிறகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறிவிட்டு மறுபுறம் தீவிரவாததத்தை தூண்டி வருகிறார். கடந்த வாரம் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 3 போலீசாரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா கடைசி நேரத்தில் ரத்து செய்தது.

    இதற்கு இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து இருந்தார். தற்போது அவரது ராணுவத்தின் ஆலோசனைப்படி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஹாஜிபூர், கதுவா பகுதிகளில் இந்திய ராணுவம் பாதுகாப்பு படைகளை அதிகரித்துள்ளது.  #JammuKashmir #Pakistan
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது என பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு எடுத்து உள்ளது. #Pakistan #FinancialReform
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள காஷ்மீர் பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் ஆசாத் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்று தனி அதிபர், பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும்கூட, அதன் முக்கிய நிர்வாக பொறுப்பை பாகிஸ்தான் அரசு தன்னிடம்தான் வைத்துக்கொண்டு உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் அரசின் காஷ்மீர் விவகாரங்கள் துறை அமைச்சகம்தான் இதைக் கவனிக்கிறது.

    இந்த பகுதிக்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று அவ்வப்போது அங்கு போராட்டங்களும் நடந்து வருகின்றன.இதே போன்று அங்கு உள்ள கில்ஜித் பல்திஸ்தான், பாகிஸ்தான் மாகாணம் போல இயங்கி வருகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகத்தான் சீனா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடி) செலவில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா தனது பொருளாதார வழித்தடத்தை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ஏற்கனவே இந்தியா போர்க்கொடி தூக்கியது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில், நேற்று முன்தினம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் சாகித் ககான் அப்பாசி தலைமை தாங்கினார். அந்த நாட்டின் திட்டக்குழு துணைத்தலைவர் சர்தாஜ் அஜிஸ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் ஆகியவற்றில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி விரிவாக பேசினார். தொடர்ந்து இது குறித்து விவாதங்களும் நடந்தன.

    அதன் முடிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும், கில்ஜித் பல்திஸ்தானுக்கும் கூடுதலான நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரத்தை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அவற்றுடன் இதுவரை நிர்வாகம், நிதி சீர்திருத்தங்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

    இருந்தபோதிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கவுன்சில், கில்ஜித் பல்திஸ்தான் கவுன்சில், தொடர்ந்து ஆலோசனை கவுன்சில்களாக தொடர்வது என்று கூட்டத்தில் கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டது.

    பிராந்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கில்ஜித் பல்திஸ்தான் பகுதிக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசன் இக்பால், ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி குர்ரம் தஸ்தகீர் கான் மற்றும் ராணுவம், சிவில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    ×