search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருவிகள்"

    • கடந்த 5 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • மலை சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் பெரும்பாலும் இயற்கை காட்சிகளாக இருந்து வரக்கூடிய நிலையில் இங்குள்ள மலைப்பகுதிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரும் அழகுதான். இதனை கண்டு ரசிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 1 வாரமாக கொடைக்கானலை சுற்றியுள்ள மேல்மலை மற்றும் கீழ் மலை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இது மட்டுமல்லாது கொடைக்கானலில் உள்ள பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, புலவிச்சாறு அருவி, அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இதுமட்டுமின்றி மலை சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது. தொடர் மழையால் குளு குளு சீதோசனம் கொடைக்கானலில் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி செய்தும், மலை முகடுகளில் தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்களை பார்த்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர். விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து வருகின்னர். இதனால் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

    • அருவிகளில் குளிக்கும்போது பெண்கள் அணிந்து வரும் தங்க நகைகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
    • ராஜகோபால் என்பவர் அருவியில் குளிக்கும் பெண்களிடம் நகையை திருடியது தெரிய வந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் சீசன் காலத்தில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளிக்க வருவார்கள்.

    நகை திருட்டு

    அவ்வாறு அருவிகளில் குளிக்கும்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் பகுதியில் பெண்கள் அணிந்து வரும் தங்க நகைகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த மாதம் 15-ந்தேதி அருவியில் குளித்த பல பெண்களின் தங்க நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காமிரா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    கைது

    தொடர்ந்து தனிப்படை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால்(வயது 45) என்பவர் அருவியில் குளிக்கும் பெண்களிடம் நகையை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்த குற்றாலம் போலீசார் அவரிடமிருந்து 64 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை பிடிப்பதற்கு சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சுந்தரி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து ஆகியோரை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் ஆகியோர் பாராட்டினர்.

    • அமாவாசை நாட்களில் இந்துக்கள் ஆறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
    • அமாவாசை நாளான இன்று பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் அமாவாசை நாட்களில், இறந்த தங்களின் முன்னோர்கள், உறவினர்கள் நினைவாக கடற்கரை, ஆறு மற்றும் அருவிக்கரை உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து இந்துக்கள் வழிபடுவது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி அமாவாசை நாளும் இன்றே வருவதால் பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    குற்றாலத்தில் உள்ள மெயின் அருவிக்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காலை முதல் அர்ச்சகர்கள் முன்னிலையில் பலர் தர்ப்பணம் செய்து குற்றாலநாதர் கோவில் மற்றும் சன்னதி பகுதிகளில் உள்ள தெய்வங்களை வழிபட்டனர்.

    • சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    • போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், குற்றாலம் சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? அவை சரியான நிலையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஒலிபெருக்கியில் தொடர் விழிப்புணர்வு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் போதுமான அளவில் பணியில் உள்ளனரா, போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக குளித்து மகிழ்ந்து செல்லுமாறும் அறிவுறுத்தினார்.

    • அருவி கரை பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் குற்றால அருவி களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். அப்போது அங்கு குளிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.

    அமைச்சர் ஆய்வு

    இந்நிலையில் குற்றால பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவல ர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வுகள் மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவி ஆகிய அருவி கரை பகுதி களிலும் மேம்பாட்டு பணி களுக்காக ரூ. 11.34 கோடி தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே இந்த பணிகளை தொடங்க அனுமதி கொடுத்திருந்த போதிலும் இங்கு சில பகுதிகள் வனத் துறை மற்றும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இப்படி பல்வேறு துறை களிடமிருந்து தடையில்லா சான்று பெற்று தான் பணி களை மேற் கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் அதற்கான ஒப்புதல் சான்றிதழ் கிடை த்ததும் பணிகள் அனைத்தும் மேற் கொள்ளப்படும். அதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிக்கப்படும். மேலும் குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கட்டணம் என்பது எத்தனை பேர் குற்றாலத்துக்கு வருகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்து கொள்வதற்காக தான். எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணக்கெடுத்தால் தான் அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க முடியும்.

    சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் போது வியாபாரம் பெருகும். தங்கும் விடுதிகளுக்கும் வருமானம் கிடைக்கும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும் போது மாநிலமும் வளர்ச்சி யடையும். இருப்பினும் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 10 கட்டணம் என்பது வசூலிக்கப்பட மாட்டாது.

    சீரமைப்பு பணி

    குற்றாலத்தில் அரசு விடுதிகள் கட்டி முடிக்க ப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளதால் அதனை சீரமைக்க உள்ளோம். குற்றாலத்தில் தனியார் அருவிகள் செயல்பாடுகள் குறித்து தகவல் எதுவும் வர வில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். அதை மாவட்ட கலெக்டர் மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சுற்றுலா த்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலை குமார், பழனி நாடார் மற்றும் தனுஷ்குமார் எம்.பி., குற்றாலம் பேரூ ராட்சி செயல் அலுவலர் சுஷ்மா, சுகாதார அலுவலர் உட்பட பலர் உடன் இருந்த னர்.

    மேலும் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை பகுதியிலும் ரூ. 1.50 கோடியில் ஓட்டல், தங்கும் விடுதிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங் கப்பட உள்ளன. இந்த பணி களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் புதூர் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரஹீம், தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×