என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் அருவிகளில்  போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
    X

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் அருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    குற்றாலம் அருவிகளில் போலீஸ் சூப்பிரண்டு 'திடீர்' ஆய்வு

    • சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    • போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், குற்றாலம் சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? அவை சரியான நிலையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஒலிபெருக்கியில் தொடர் விழிப்புணர்வு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் போதுமான அளவில் பணியில் உள்ளனரா, போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக குளித்து மகிழ்ந்து செல்லுமாறும் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×