search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்"

    • மனித உயிர் சேதம், கால்நடை உயிர் சேதம் போன்றவற்றை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்.
    • ஏரி-குளங்கள் நிறையும் போது கரையோர மக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்துதான் தண்ணீர் திறக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நிவாரண முகாம்களும், மீட்பு படைகளும் தயார் படுத்தப்பட்டுள்ளன. எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் அதை சந்திக்கக்கூடிய அளவுக்கு அரசு நிர்வாகம் உள்ளது.

    மொத்தம் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் (புயல்-பேரிடர்) கடலோர மாவட்டங்களில் வைத்துள்ளோம். நிவாரண முகாம்கள் 4917 தயார் நிலையில் வைத்துள்ளோம். பெரிய அளவுக்கு மழை இல்லை. நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மாவட்ட கலெக்டர்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். மனித உயிர் சேதம், கால்நடை உயிர் சேதம் போன்றவற்றை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்.

    ஏரி-குளங்கள் நிறையும் போது கரையோர மக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்துதான் தண்ணீர் திறக்கப்படும்.

    இப்போது வைகை அணை திறக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கரையோர மக்களுக்கு 80 ஆயிரம் பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நாளை முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக்கா எச்சரித்தது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது.

    இன்று (2.11.2023) காலை 8.30 மணி முடிய 33 மாவட்டங்களில் 8.74 மி.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 37.03 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.06 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து மழை அதிகரிக்கும் என்பதால் மீட்பு குழுக்களை ஏற்படுத்தவும், நிவாரண முகாம்களை அமைக்கவும் அனைத்து கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் இன்று ஆய்வு செய்தார்.

    அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத்தணிப்பு பணிகளின் காரணமாக 4399 ஆக இருந்த பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது. வெள்ளத்தணிப்பு பணிகளுக்காக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வள ஆதாரத்துறை ஆகிய துறைகளுக்கு 819.50 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    மாநில, மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன.

    பொதுமக்கள், வாட்ஸ்அப் எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.

    424 கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன்எச்சரிக்கை அமைப்புகள் மூலம் சைரன் ஒலி, நேரடி ஒளிபரப்பு மூலம் எச்சரிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்திகள் பரப்பப்படுகின்றன.

    பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் குறித்து நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டு அவர்களது பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.

    TNSMART செயலி மூலமாகவும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

    14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதோடு, 16 மாவட்டங்களில் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.

    அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் நபர்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என மொத்தம் 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

    பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் 169 நிவாரண முகாம்கள் உள்ளதோடு, மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

    பேரிடர் காலங்களில் தேடல், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும், தேசிய பேரிடர் மீட்புப்படையின் குழுக்கள் அரக்கோணத்திலும், சென்னையிலும் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    பேரிடர் காலங்களில் தேவையான அலுவலர்களை தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையால் தயாரிக்கப்பட்ட தொலைபேசி கையேட்டை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்டார்.

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் ராஜாராமன், பேரிடர் மேலாண்மை இயக்குநர், ராமன், ஆகிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி உள்பட 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால் நிதி நிலைமைக்கு ஏற்ப முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஆரணியை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா? எனவும், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன், கோவி செழியன் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அரசாணை எண்.279-ன் படி ஒரு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான தகுதிகளை பூர்த்தி செய்யாததால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க முடியாது எனவும், கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி உள்பட 8 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால் நிதி நிலைமைக்கு ஏற்ப முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும், நகைப்புக்குரியதாகவும் உள்ளது.
    • யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    சென்னை:

    முதன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புரட்சித் தலைவி அம்மாவை அநாகரிகமான முறையில் பேசியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற புரட்சித் தலைவி அம்மாவை அறிமுகப்படுத்தியதில் தனக்கும் பங்கு உண்டு என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும், நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    பதவிக்காக கட்சி மாறி, அமைச்சராகியுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தான் சார்ந்துள்ள கட்சியின் தலைமையை குளிர்விக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரை துதிபாடலாம். அதில் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை. அதே சமயத்தில், அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளரான அம்மாவை சிறுமைப்படுத்தி பேசுவது என்பது ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற செயல். கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முந்தைய காலங்களின் அனுபவத்தால் ஏரிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு உபரி தண்ணீரை திறந்து விடப்படுகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி. தற்போது 20.66 அடி தண்ணீர் உள்ளது. எனவே நீர் வரத்துக்கு ஏற்ப 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மழை வெள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை வெள்ளத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    சென்னையை தவிர வேறு எங்கும் மழைநீர் தேக்கம் என்பது இல்லை. இதுவரை 138 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 68 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி பார்வையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நிலைமைகளை கேட்டு வருகிறோம். நகராட்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட அளவில் கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.

    முந்தைய காலங்களின் அனுபவத்தால் ஏரிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு உபரி தண்ணீரை திறந்து விடப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி. தற்போது 20.66 அடி தண்ணீர் உள்ளது. எனவே நீர் வரத்துக்கு ஏற்ப 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மழையில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×