search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
    X

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும், நகைப்புக்குரியதாகவும் உள்ளது.
    • யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    சென்னை:

    முதன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புரட்சித் தலைவி அம்மாவை அநாகரிகமான முறையில் பேசியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற புரட்சித் தலைவி அம்மாவை அறிமுகப்படுத்தியதில் தனக்கும் பங்கு உண்டு என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும், நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    பதவிக்காக கட்சி மாறி, அமைச்சராகியுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தான் சார்ந்துள்ள கட்சியின் தலைமையை குளிர்விக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரை துதிபாடலாம். அதில் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை. அதே சமயத்தில், அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளரான அம்மாவை சிறுமைப்படுத்தி பேசுவது என்பது ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற செயல். கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×