search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம் முழுவதும் 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழையை கண்காணிக்கிறார்கள்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகம் முழுவதும் 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழையை கண்காணிக்கிறார்கள்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

    • முந்தைய காலங்களின் அனுபவத்தால் ஏரிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு உபரி தண்ணீரை திறந்து விடப்படுகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி. தற்போது 20.66 அடி தண்ணீர் உள்ளது. எனவே நீர் வரத்துக்கு ஏற்ப 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மழை வெள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை வெள்ளத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    சென்னையை தவிர வேறு எங்கும் மழைநீர் தேக்கம் என்பது இல்லை. இதுவரை 138 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 68 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி பார்வையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நிலைமைகளை கேட்டு வருகிறோம். நகராட்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட அளவில் கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.

    முந்தைய காலங்களின் அனுபவத்தால் ஏரிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு உபரி தண்ணீரை திறந்து விடப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி. தற்போது 20.66 அடி தண்ணீர் உள்ளது. எனவே நீர் வரத்துக்கு ஏற்ப 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மழையில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×