search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்டை"

    • மாற்றுத்தி றனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இதில், 21 மாற்றுத்தி றனா ளிகளுக்கு குறைதீர்ப்புக்கு கூட்டத்திலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்தி றனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    உதவி கலெக்டர் தணி காச்சலம் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலு வலர் மகிழ்நன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி கள் வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகை உட்பட 75 மனுக்களை உதவி கலெக்டரிடம் கொடுத்தனர்.

    இதில், 21 மாற்றுத்தி றனா ளிகளுக்கு குறைதீர்ப்புக்கு கூட்டத்திலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மேட்டூர்அரசு மருத்துவமனை டாக்டர் சுரேந்திரன், விவேகானந்தன், மேட்டூர் தாசில்தார் முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் 1 முதல் 18 வயது வரையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 20-ந் தேதி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறுகிறது.

    முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம் ஆகிய பிரிவு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்க உள்ளனர்.

    டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்தி றனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    வலங்கைமான் ஒன்றியத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.
    • 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஓய்வூதி யம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 19 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி 6 பயனாளிகளுக்கு ரூ.74,297 மதிப்பிலான திருப்பப்பட்ட காசோலைகளை வழங்கினர். மேலும் 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. பின்னர் 5 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் திரு.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அபர்ணா தேவி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

    ×