search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் கனமழை"

    • அசாமில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    • அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் 30க்கு மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதாக திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாவுக்கு தலாய் லாமா எழுதியுள்ள கடிதத்தில், அசாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் பிரதமர் மோடி கவலை.
    • அசாம் மாநில முதல்வர் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு.

    அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 28 மாவட்டங்களில் 18.95 லட்சம் பேர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து மாநிலத்தின் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

    மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை 6 மணிக்கு என்னை தொடர்புக் கொண்டு அசாமில் வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார். இந்த இயற்கை பேரிடரால் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். அப்போது, பிரதமர் மோடி மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். அவரது உறுதியளிக்கும் பெருந்தன்மையால் தாழ்மையடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அசாமில் 25 மாவட்டங்கள் வெள்ளம் நில சரிவுகளால் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளன.
    • 11.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகளை நடத்த விதிவிலக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு கம்ரூப் மாவட்ட பேரிடர் மேலாண் கழகத்தின் துணை ஆணையாளர் மற்றும் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×