மழை, வெள்ள பாதிப்பில் இருந்து மீளாத அசாம்... பலி எண்ணிக்கை 52-ஆக உயர்வு

கனமழையால் 29 மாவட்டங்களில் 21.13 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.194 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மழை, வெள்ள பாதிப்பில் இருந்து மீளாத அசாம்... பலி எண்ணிக்கை 52-ஆக உயர்வு
Published on

அசாம்... இந்த வருடம் கனமழைக்கு மிகப்பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீர் கனமழையால் அசாம் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

இந்திய ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியை மேற்கொண்டனர். துண்டிக்கட்ட கிராமங்களை செயற்கை பாலங்கள் உருவாக்கி மீட்டனர். இதனால் மக்கள் விரைவாக பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது. இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையால் 29 மாவட்டங்களில் 21.13 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com