search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாம் வெள்ள பாதிப்பு: அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதி- முதல்வர் ஹிமந்தா தகவல்
    X

    அசாம் வெள்ள பாதிப்பு: அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதி- முதல்வர் ஹிமந்தா தகவல்

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் பிரதமர் மோடி கவலை.
    • அசாம் மாநில முதல்வர் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு.

    அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 28 மாவட்டங்களில் 18.95 லட்சம் பேர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து மாநிலத்தின் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

    மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை 6 மணிக்கு என்னை தொடர்புக் கொண்டு அசாமில் வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார். இந்த இயற்கை பேரிடரால் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். அப்போது, பிரதமர் மோடி மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். அவரது உறுதியளிக்கும் பெருந்தன்மையால் தாழ்மையடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×