search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youngmen"

    • பால்கட்டளை செல்லும் சாலையில் பேச்சிராஜனின் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
    • பேச்சிராஜனின் தந்தை தங்கராஜ் கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டருக்கு கொடுத்தார்.

    நெல்லை:

    நெல்லையில் இன்று கொலை செய்யப்பட்ட பேச்சிராஜனின் உறவினர்கள் மதுரை பைபாஸ் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பால்கட்டளை செல்லும் சாலையில் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், ஆர்.டி.ஓ.சந்திரசேகர் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பேச்சிராஜனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், பேச்சிராஜனின் மனைவி தங்கமாரிக்கு படிப்புக்கு தகுந்த அரசு வேலை வழங்க வேண்டும், எங்கள் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவற்றை மனுவாக எழுதி கொடுத்தால் அரசுக்கு அனுப்பி பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து பேச்சிராஜனின் தந்தை தங்கராஜ் கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டருக்கு கொடுத்தார். எனினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் என பேச்சிராஜனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 2 நாட்களுக்கு முன்பு ரேவதி மொபட்டில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் அவரிடம் 7 பவுன் நகையை பறித்து சென்று விட்டார்.
    • வழிப்பறியில் ஈடுபட்ட நபர் ஏரல் தாலுகா சிவகளை நாடார் தெருவை சேர்ந்த அய்யப்பன் (24) என்பது தெரியவந்தது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள புளிய நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணகுமார். வாழைக்காய் வியாபாரி.

    இவரது மனைவி ரேவதி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சாயர்புரத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    ரேவதியின் தந்தை கடந்த 25 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதால் அவர் தனது தந்தை வீடு உள்ள புதுக்கோட்டையில் இருந்து தனது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துச் செல்வார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேவதி மொபட்டில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்று விட்டார்.

    இது குறித்து தனது கணவர் சரவணகுமாரிடம் தகவல் தெரிவித்து விட்டு சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சாயர்புரம் போலீசார் சி.சி.டி.வி. காமிரா உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் ஏரல் தாலுகா சிவகளை நாடார் தெருவை சேர்ந்த அய்யப்பன் (24) என்பது தெரியவந்தது. அவரை ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கைது செய்தார். அவரிடம் இருந்து 7 பவுன் தாலி செயின் மீட்கப்பட்டது.

    • சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேனை சோதனையிட்டதில் அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ,கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலிப் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேனை சோதனையிட்டதில் அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டு பிடித்தனர்.

    வேனை ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவர் கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜா ( வயது 25) என்பதும் இவர் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ரைஸ் மில் மற்றும் கோழி பண்ணைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து , கடத்தப்பட்ட ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் வேனை ஓட்டிவந்த ராஜாவை கைது செய்தனர்.

    பின்னர் அவரை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    ×