search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker house"

    • தொழிலாளி குடும்பத்துடன் உறவினரை பார்க்க வெளியூர் சென்ற போது கொள்ளை நடந்துள்ளது.
    • பீரோ உடைக்கப்பட்டு 2 பவுன் நெக்லஸ், 25 கிராம் கம்மல், வெள்ளி கொலுசு, ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் உய்க்காட்டான் (வயது39). தொழிலாளி.

    இவர் குடும்பத்துடன் உறவினரை பார்க்க வெளியூர் சென்றுவிட்டார்.

    நேற்று மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நெக்லஸ், 25 கிராம் கம்மல், வெள்ளி கொலுசு, ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர்கள் சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு பார்ைவயிட்டு கொள்ளையில் ஈடுபட்டவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனியில் மில் ஊழியர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பழனி:

    பழனி ஆர்.ஜே.நகரை சேர்ந்தவர் கஸ்தூரிராஜா(வயது52). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனவே அவரை பார்ப்பதற்காக மனைவி சாவித்திரியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றுவிட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் அங்கிருந்த பீரோவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை அக்கம்பக்கத்தினர் கஸ்தூரிராஜாவின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளைபோன நகை-பணம் குறித்து கஸ்தூரிராஜா வந்த பிறகே முழுவிபரம் தெரியவரும்.

    பழனி பகுதியில் அரங்கேறி வரும் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஆன்மீகத்தலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து வாலிபர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்துவிட்டு தப்பிச்செல்கின்றனர்.

    இதனால் துப்புகிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். நேற்றும் பா.ஜனதா நிர்வாகி வீட்டில் கொள்ளை போனது. ஆனால் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை.

    எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வெளிமாநில வாலிபர்களை கண்காணிக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    சத்திரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள தேவத்தூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் நாட்ராயன். கூலி தொழிலாளி. அவரது மனைவி குப்பாத்தாள் . இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்தனர். பூட்டியிருந்த பூட்டை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    மாலை வீட்டிற்கு வந்த குப்பாத்தாள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை- பணம் மாயமானது கண்டு பதறினார்.

    இதுகுறித்து உடனே அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அம்பிளிக்கை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அவினாசி அருகே பனியன் தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசி:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் தனது மனைவி மாதவியுடன் அவினாசி அருகே உள்ள ஏ.வி.டி லே அவுட் எக்ஸ்டன்சன் பகுதியில் தங்கி உள்ளார். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வெள்ளத்துரை வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மாதவி உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை வீட்டிற்கு திரும்பிய மாதவி நகை-பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவினாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×