என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trinamool confress"

    • பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால்.
    • இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக யாத்திரைக்கு வந்துள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.

    மேலும், இந்தியின் இதயப் பிரதேசமான மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால் விடுத்தார்.

    காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி, மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பயணித்ததையும் மம்தா விமர்சித்தார். 

    இதுகுறித்து மம்தா பானர்ஜி மேலும் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் 300 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

    இப்போது, இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக அவர்கள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்.

    காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட்டால் குறைந்தது 40 இடங்களையாவது பெறுவார்களா என்பது எனக்கு சந்தேகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்டது. டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மி கட்சிக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.

    இதற்கிடையே, டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதையடுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதனால் திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, கெஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ள செய்தியில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி. கட்சிக்கு ஆதரவளித்த மேற்கு வங்க முதல் மந்திரி மம்தாவுக்கு நன்றி. நீங்கள் நல்ல நேரத்திலும், சிக்கலான நேரத்திலும் எப்போதும் ஆதரவாகவும், ஆசியும் அளித்து உறுதுணையாக இருந்துள்ளீர்கள் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    ×