search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirukoilur"

    திருக்கோவிலூரில் பால் அபிஷேகம் செய்தபோது கட்-அவுட் சரிந்து விழுந்ததில் அஜித் ரசிகர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். #Ajithfans
    திருக்கோவிலூர்:

    நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனையொட்டி தியேட்டர் முன்பு அஜித் ரசிகர்கள் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் கட்டி இருந்தனர். இன்று திரைப்படம் ரிலீஸ் ஆனதையொட்டி ரசிகர்கள் ஏராளமானோர் தியேட்டர் முன்பு குவிந்தனர்.

    காலை சுமார் 7.30 மணியளவில் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் கட் அவுட் மீது ஏறி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது எதிர்பாராத வகையில் கட் அவுட் கீழே சரிந்து விழுந்தது. இதில் அஜித் ரசிகர்கள் ஏழுமலை, ஸ்ரீதர், முத்தரசன், அருள், பிரதாப், பிரபாகரன் ஆகிய 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    உடன் தியேட்டர் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த பிரதாப், முத்தரசன், ஸ்ரீதர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் ரசிகர்கள் திரையரங்கிற்குள் சென்றதும் படம் திரையிடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  #Ajithfans



    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகம் பட்டு இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் கணவனை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் சென்னையில் டைல்ஸ் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக சென்னையில் தங்கியிருந்து விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து சென்றார். இவரது மனைவி ரீனா (31). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ரமேசுக்கு தனது மனைவி ரீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் சென்னையில் இருந்து மேட்டுச்சேரிக்கு வந்தார். நீ நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. இனிமேல் ஒழுங்காக இரு என ரீனாவிடம் கூறினார். அதற்கு ரீனா, நீங்கள் தான் என்மேல் தேவையில்லாமல் சந்தேகம் படுகிறீர்கள் என்றார். இதில் கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி ரமேஷ் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து ரீனாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று ரீனா அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    உடல் கருகிய நிலையில் இருந்த ரீனாவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று இரவு ரீனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
    திருக்கோவிலூர் அருகே லாரிகளில் மணல் கடத்திய 3 டிரைவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் கூட்ரோட்டில் அரங்கநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 3 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரி டிரைவர்கள் சேலம் மாவட்டம் புலியாக்குறிச்சியை சேர்ந்த திராவிடமணி(வயது 27), கள்ளக்குறிச்சி தாலுகா லட்சியம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(50), திண்டிவனம் அருகே உள்ள நற்குணம் கிராமத்தை சேர்ந்த சிவா(28) ஆகியோரை போலீசார் கைது செய்து லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் விஷ சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 120 லிட்டர் வி‌ஷ சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தில் வசிப்பவர் பன்னீர்செல்வம் (வயது 30). இவரது வீட்டில் வி‌ஷசாராயம் வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். 120 லிட்டர் வி‌ஷ சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (வயது 56) என்பவர் வீட்டில் இருந்து 120 லிட்டர் வி‌ஷசாராயத்தையும், வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் (வயது 39) என்பவர் வீட்டில் இருந்து 120 லிட்டர் வி‌ஷசாராயத்தையும் போலீசார் கைப்பற்றினார். மேலும் ஏழுமலை மற்றும் செந்தில்முருகனை கைது செய்தனர். #Tamilnews

    ×