என் மலர்
செய்திகள்

அரகண்டநல்லூரில் விஷ சாராயம் விற்ற 3 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் விஷ சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 120 லிட்டர் விஷ சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தில் வசிப்பவர் பன்னீர்செல்வம் (வயது 30). இவரது வீட்டில் விஷசாராயம் வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். 120 லிட்டர் விஷ சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (வயது 56) என்பவர் வீட்டில் இருந்து 120 லிட்டர் விஷசாராயத்தையும், வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் (வயது 39) என்பவர் வீட்டில் இருந்து 120 லிட்டர் விஷசாராயத்தையும் போலீசார் கைப்பற்றினார். மேலும் ஏழுமலை மற்றும் செந்தில்முருகனை கைது செய்தனர். #Tamilnews

Next Story