என் மலர்
செய்திகள்

திருக்கோவிலூர் அருகே லாரிகளில் மணல் கடத்திய 3 டிரைவர்கள் கைது
திருக்கோவிலூர் அருகே லாரிகளில் மணல் கடத்திய 3 டிரைவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் கூட்ரோட்டில் அரங்கநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 3 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரி டிரைவர்கள் சேலம் மாவட்டம் புலியாக்குறிச்சியை சேர்ந்த திராவிடமணி(வயது 27), கள்ளக்குறிச்சி தாலுகா லட்சியம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(50), திண்டிவனம் அருகே உள்ள நற்குணம் கிராமத்தை சேர்ந்த சிவா(28) ஆகியோரை போலீசார் கைது செய்து லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story